Home / ஆன்மிகம் / சிற்பம் என்பது ஒரு முப்பரிமாணக் கலை

சிற்பம் என்பது ஒரு முப்பரிமாணக் கலை

சிற்பம் என்பது ஒரு முப்பரிமாணக் கலைப் பொருள் ஆகும். இது கடினமான அல்லது நெகிழ்வுத் தன்மை கொண்ட பொருள்களுக்கு உருவம் கொடுப்பது மூலம் உருவாக்கப்படுகிறது. பொதுவாகச் சிற்பங்கள் செய்வதற்காகப் பயன்படும்.

பொருட்களுள், கற்கள், உலோகம், மரம் மண் என்பவை அடங்குகின்றன. கல், மரம் போன்றவற்றைப் பயன்படுத்தும்போது, சிற்பங்கள் செதுக்குவதன் மூலம் செய்யப்படுகின்றன. வேறு பொருட்களில் செய்யும்போது, ஒட்டுதல், உருக்கி வார்த்தல், அச்சுக்களில் அழுத்துதல், கைகளால் வடிவமைத்துத் சூளையில் சுடுதல் போன்ற பலவித செயல்முறைகள் கையாளப்படுகின்றன.

சிற்பங்களை உருவாக்குபவர் சிற்பி எனப்படுகிறார். கல், உலோகம், செங்கல், மரம், சுதை, தந்தம், வண்ணம், கண்டசருக்கரை, மெழுகு என்பன சிற்பம் வடிக்க ஏற்றவை என பிங்கல நிகண்டு என்ற இலக்கியம் கூறுகின்றது.

கல்லில், கருங்கல், மாக்கல், பளிங்குக் கல், சலவைக் கல் ஆகியவையும் உலோகங்களில் பொன், வெள்ளி, வெண்கலம், செம்பும் ஆகியனவும் சிற்பம் செய்ய ஏற்றனவாகக் கருதப்பட்டன. வடிவம் முழுவதையும் முன்புறம் பின்புறம் இரண்டையும் காட்டும் சிற்பங்களை முழு வடிவச் சிற்பங்கள் என்றும் வடிவத்தின் ஒருபுறம் மட்டும் காட்டும் சிற்பங்களை ‘புடைப்புச் சிற்பங்கள்’ என்றும் வகைப்படுத்துவர்.

சில பொதுவான சிற்ப வகைகள்:

தனிச் சிற்பம்: சிலைகள் இவ்வகையைச் சார்ந்தன. (சிலை: குறிப்பிட்ட பொருள், மனிதர், நிகழ்ச்சி, விலங்குபோன்றவற்றைப் போலச் செய்யப்படும் சிற்பம்.

புடைப்புச் சிற்பம்: இவை பின்னணியுடன் பகுதியளவு இணைந்து புடைத்தாற்போன்று அமைக்கப்படும். பண்டைய எகிப்திய சுவர் சிற்பங்கள் புதைவுறு தோற்றச் சிற்பங்களாகும். புடைப்புச் சிற்பங்கள் பெருமளவு குழுவான உருவங்கள் அல்லது ஒரு குறிப்பிட்ட செய்திகளைச் சொல்லும் கதையமைப்பினை வெளிப்படுத்த பயன்படுத்தப்படுவன. இது கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் ஓர் அரிய தொழில் நுணுக்கத் திறனாகும்.

செதுக்குச் சிற்பங்கள்: மற்றொரு வகையான சிற்பங்கள் செதுக்குச் சிற்பங்கள் ஆகும். இவை சிலை செய்யப்பயன்படும் உலோகம் அல்லது பொருட்களிலிருந்து தேவையற்ற பொருட்களை செதுக்கி நீக்கிய பின்பு தோற்றம் பெருபவையாகும். ஒரு சாதாரண மரம், கல் அல்லது உலோகத்திலிருந்து இவை நவீன தொழில் நுட்பங்கள் மூலம் தேவையற்ற பகுதிகளை நீக்க சிற்பங்களாக உயிர்த்தெழுகின்றன.

அடுக்கற்கலை: பொருட்களை ஒன்றன்மீது ஒன்று அடுக்கிச் செய்யப்படும் ஒரு வகைச் சிற்பம்.

Check Also

தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள்…

மேன்மை மிகுந்த மேஷ ராசி நேயர்களே! ‘துன்முகி’ வருடம் முடிந்து ‘ஹேவிளம்பி’ வருடம் தொடங்குகிறது. ஆண்டு பிறப்பதற்கு முன்பாகவே, அது …