Home / ஆன்மிகம் / தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்….

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்….

தமிழ்ப் புத்தாண்டு

தமிழ்ப் புத்தாண்டு என்பது தமிழர்கள், புதிய ஆண்டு பிறப்பதைக் கொண்டாடும் விழாவாகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும், பிற நாடுகளிலும் வாழும் தமிழ் மக்கள் சித்திரை மாதத்தின் முதல் நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர். எப்போதிருந்து இந்த வழக்கம் நிலவிவருகின்றது என்பதை அறிந்துகொள்வதற்கான சான்றுகள் கிடைக்கவில்லை. பொதுவாகத் தமிழ்ப் புத்தாண்டு, இந்து சமயத்தைச் சார்ந்த தமிழர்கள் மட்டுமே இந்நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர். தமிழ் மாதங்களை அவர்கள் மட்டுமே பின்பற்றி வருகின்றனர்,
2008 ஆண்டு சனவரி மாதத்தில் அப்போது தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த அரசு தை மாதம் முதல் நாளைப் புத்தாண்டாக அறிவித்து அரசாணை பிறப்பித்தது.  2011 இல் மீண்டும் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது இவ்வாணை திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டது.

புத்தாண்டு வரலாறு

இந்தியாவில் (2008க்கு முன்பு வரையும், 2011 ஆம் ஆண்டிலிருந்தும்) வழக்கத்தில் உள்ள சித்திரை முதல் நாள் புத்தாண்டு வடபகுதி மன்னனாக இருந்த சாலிவாகனன் என்பவனால் கிறித்துவுக்குப் பின் 78ஆம் ஆண்டில் வடநாட்டில் ஏற்படுத்தப்பட்டது என்று வரலாற்று ஆசிரியர்களால் நம்பப்படுகிறது. சில வரலாற்று ஆசிரியர்கள் கனிஷ்கன் என்ற அரசனால் இது ஏற்படுத்தப்பட்டது என்று கூறுகின்றனர்.

1921 ஆம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரியில் மறைமலை அடிகளாரின் தலைமையில் 500 பேர் கொண்ட அறிஞர் குழு ஆய்வு செய்து தை முதல் நாளே தமிழாண்டு பிறப்பு என முடிவு செய்தது. இது இந்து மத எதிர்ப்பு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று இந்திய தமிழ் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர், ஆகையால் சித்திரை ஒன்றே தமிழர்களின் முதல் நாள் என்று உறுதிபடுத்தபட்டு மீண்டும் சட்ட அடிப்படையில் வழக்கில் ஏற்றுகொள்ளப்பட்டது,

தமிழகத்தில் அரசியல் உத்தரவுகள்

தைம் முதல்நாள்தான் புத்தாண்டு என்று திமுக அரசால் 2008 தைம் மாதம் 23 ஆம் நாள் ஆண்டு அரசு ஆணையாக அறிவிக்கப்பட்டது.  2011 இல் இது அதிமுக அரசால் ரத்து செய்யப்பட்டு மீண்டும் சித்திரை முதல் நாள் புத்தாண்டாக அரசால் ஒத்துக்கொள்ளப்பட்டது.

சர்வதாரி புத்தாண்டு

மேலும் வாய்மொழி உத்தரவாகப் தமிழ்ப்புத்தாண்டு ’சர்வதாரி’ பிறந்த 13.04.2008 அன்று தமிழகத்தின் திருக்கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படக்கூடாது என்று அப்போதைய அரசால் உத்தரவிடப்பட்டு செயற்படுத்தவும்பட்டது. தமிழ்ப்புத்தாண்டன்று இறைவனின் திருச்சன்னதி முன் நின்று பஞ்சாங்கம் படிக்கும் முறையும் சர்வாதி புத்தாண்டன்று வாய்மொழி உத்தரவதிகாரத்தால் ரத்து செய்யப்பட்டு தடுக்கப்பட்டது.

கருத்து வேறுபாடுகள்

2006-2011 வரையிருந்த தமிழக அரசு சனவரி 29, 2008 அன்று அறிவித்த, தை முதல் நாள் புத்தாண்டு  பொதுமக்களிடையே அதிருப்தியை உருவாக்கியது. தமிழக அரசுக்குத் தமிழகப் பாரம்பரிய விடயங்களில் தலையிட அனுமதி உண்டா என்றும் கேள்வி எழுந்தது. அதன்படி 2006-2011 வரையிருந்த தமிழக அரசும், அவ்வரசு அறிவித்த புத்தாண்டு தினத்துக்கு ஆதரவு தந்த பிரிவைச் சேர்ந்த மக்களும் தையில் தமிழ் புத்தாண்டைக் கொண்டாடினர்.

ஆகத்து 23, 2011ல் அப்போது ஆட்சியில் இருந்த தமிழக அரசு மீண்டும் சித்திரை ஒன்றை தமிழ்ப்புத்தாண்டாக அறிவித்தது. அதற்கு 2006-2011 வரை இருந்த தமிழக அரசைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

 

Check Also

கனவுகளும் அதற்கான பலன்களும்

நாம் ஆழ்ந்து தூங்கும் போது நமக்கு கனவுகள் வருகிறது. ஒவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு பலன்கள் உள்ளது. அதேபோல் நாம் கனவு …