Home / ஆன்மிகம் / நவகிரக பரிகார தளங்கள் மற்றும் வழிபாட்டு முறைகளை இரண்டு நிமிடத்தில் அறியலாம்…..

நவகிரக பரிகார தளங்கள் மற்றும் வழிபாட்டு முறைகளை இரண்டு நிமிடத்தில் அறியலாம்…..

நவகிரஹ திருத்தலங்கள் அனைத்தும் கும்பகோணத்துக்கு அருகிலேயே அமைந்திருக்கின்றன.

1.முதலாவதாக சூரியன்

சூரியனார் கோவில்
சூரியனை வழிபடுவதால் அனைத்து தோஷங்களும் நீங்கப் பெறுவர்.

வழித் தடம்
கும்பகோணம்- மயிலாடுதுறை சாலையில் ஆடுதுறையிலிருந்து 2 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.

2. சந்திரன்

திங்களுர்
மன நிலை பாதிப்பு, பாப கிரக சேர்க்கை உள்ளவர் இங்குள்ள கைலாச நாதர் கோவிலில் உள்ள சந்திரனை வழிபடுவதால் தோச நிவர்த்தியாகும்.

வழித் தடம்

கும்பகோணம்- திருவையாறு சாலையில் அமைந்துள்ளது.

3.செவ்வாய்

வைத்தீஸ்வரன் கோவில்;
ஜாதகத்தில் செவ்வாய் பாதிப்பு, திருமணத்தடை, தொழில் சிக்கல், வீடு, மனை வாங்க, அடிக்கடி விபத்து போன்றவை ஏற்பட்டால் இங்கு உள்ள செவ்வாய்க்கு தீபம் ஏற்றி தரிசனம் செய்தால் கடுமையான செவ்வாய் தோசமும் நீங்கும்

வழித் தடம்
மயிலாடுதுறையிலிருந்து 14 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது..

4. புதன்

திருவெண்காடு; குழந்தைகள் கல்வியில் ஆர்வமின்றி இருத்தல், கல்வி தடைகள் ஏற்படும் போது இங்கு சன்னிதானத்தில் எழுந்தருளியுள்ள புதனையும் வழிபட்டால் தோசங்கள் நீங்கும்.

வழித் தடம்
மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் செல்லும் சாலையில் அமைந்துள்ளது.

5.குரு

ஆலங்குடி புத்ர தோஷம், திருமண தடை , குடும்பத்தில் குழப்பம், பிறப்பு ஜாதகத்தில் குரு தோஷம் உள்ளவர்கள் வியாழன் தினத்தன்று இங்கு அருள்பாலிக்கும் குரு பகவானை நெய் தீபம் வைத்து வழிபட்டால் மங்களம் உண்டாகும்.

வழித் தடம்
கும்பகோணம்- மன்னார்குடி சாலையில் அமைந்துள்ளது.

6. சுக்கிரன்

கஞ்சனூர்:
ஜாதகத்தில் சுக்கிர தோஷம் உள்ளவர் இங்குள்ள கரப்பாகிரஹ
சுக்ரீஸ்வரரை சுக்கிர பகவானாக் கருதி வழிபட்டால் தோஷம் நீங்கும்.
வழித் தடம்
சூரியனார் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ளது.

7. சனி

திருநள்ளாறு:
பிறப்பு ஜாதகப்படி ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷடம சனி காலங்களில் திருத்தலத்தில் உள்ள நள தீர்த்தத்தில் நீராடி சனீஸ்வரர் சன்னதி சென்று எள் தீபம் வைத்து வழிபட்டால் தோசம் நீங்கும்

வழித் தடம்:
மயிலாடுதுறையிலிருந்து 30 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.

8. ராகு

திருநாகேஸ்வரம்:
ராகுவினால் ஏற்பட்ட திருமணத்தடை, மாங்கல்ய தோசம் மற்றும் புத்திர தடை போன்றவைகள் வெள்ளிக்கிழமைகளில் ராகுவிற்கு பாலாபிசேகம், அர்ச்சனை செய்து வழிபட நாக தோசம் நீங்கும்.

வழித் தடம்:
கும்பகோணத்திலிருந்து 6 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.

9.கேது

திருக்காளத்தி
பஞ்ச லிங்கங்களில் வாயு லிங்கம் உள்ள காளத்தீஸ்வரருக்கு ருத்ரா பிசேகம் மற்றும் அர்ச்சனை செய்ய கேதுவினால் ஏற்பட்ட தோசம் நீங்கும். கால சர்ப்ப தோச பரிகார நிவர்த்தி திருத்தலம்.

வழித் தடம்:
திருப்பதிக்கும் சென்னைக்கும் நடுவில் உள்ளது.

நவகிரகங்களை தொடர்ந்து வழிபட்டால் எல்லா நன்மைகளும் வந்து சேரும் செல்வம் செழிக்கும், வம்சம் தழைக்கும், செல்வவளம் பெருகும்.

Check Also

கனவுகளும் அதற்கான பலன்களும்

நாம் ஆழ்ந்து தூங்கும் போது நமக்கு கனவுகள் வருகிறது. ஒவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு பலன்கள் உள்ளது. அதேபோல் நாம் கனவு …