Home / கேட்ஜெட்ஸ் / விரைவில் அறிமுகமாகின்றது “Samsung Galaxy Tab S3”

விரைவில் அறிமுகமாகின்றது “Samsung Galaxy Tab S3”

சாம்சுங் நிறுவனம் அண்மைக் காலமாக ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்வதிலேயே அதிக ஆர்வம் காட்டி வந்தது.

எனினும் தற்போது தனது புதிய டேப் ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

Samsung Galaxy Tab S3 எனும் குறித்த டேப் ஆனது 9.7 அங்குல அளவுடையதும், 2048 x 1536 Pixel Resolution உடையதுமான தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

இவற்றுடன் Qualcomm Snapdragon 820 SoC Processor, பிரதான நினைவகமாக 4GB RAM, 32GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

தவிர 12 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பனவும் தரப்பட்டுள்ளன.

எனினும் இதன் விலை மற்றும் அறிமுகமாகும் தினம் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

Check Also

120 நாடுகளில் ஒரே நேரத்தில்: நோக்கியா படைக்கப் போகும் சாதனை

உலகளவில் ஒரே நேரத்தில் 120 நாடுகளில் நோக்கியா ஸ்மார்ட்போன்களை வெளியிட உள்ளதாக HMD குளோபல் நிறுவனம் அறிவித்துள்ளது. சர்வதேச மொபைல் …