Home / சமையலறை / இறால் பிரியாணி

இறால் பிரியாணி

இறால் பிரியாணி:

இறால் சாப்பிடுவதால் உடல்நலத்திற்கு கிடைக்கும் நன்மைகள்:

நம் விரல் அளவில் இருக்கும் இறாலை ஒரு பிடி பிடித்தால் அது இதய நோயை விரட்டியடிக்கும். மேலும், உடல் எடை குறைப்பதிலும், இளமை தோற்றத்தையும் கொடுப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

இறால்களில் ஹெபாரின் என்ற பொருள் அடங்கியுள்ளதால், அவை மாஸ்குலர் டீ-ஜெனரேஷன் எனப்படும் கண் பார்வை சிதைவிலிருந்து காக்கும். மேலும் இதிலுள்ள அஸ்டக்ஸாந்தின் கண் வலிக்கு பெரிய நிவாரணியாக விளங்கும்.

இறாலில் அஸ்டக்ஸாந்தின் போன்ற கரோடினாய்டு உள்ளதால், அவை பல வகை புற்றுநோய்களில் இருந்து காக்கும். மேலும் அதில் செலினியம் என்ற அரியக் கனிமம் உள்ளது.

இறாலில் உள்ள புரதம், கால்சியம், பொட்டசியம் மற்றும் பல வைட்டமின்கள் உள்ளதால், எலும்புகள் சிதைவு ஏற்படாமல் அது பாதுகாக்கும்.

இறாலில் உள்ள அஸ்டக்ஸாந்தின் ஞாபக சக்த்தியை அதிகரிக்கவும், மூளை அணுக்கள் உயிருடன் இருக்கவும், மூளை அழற்சி நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கவும் உதவுகிறது.

இறாலில் அதிக அளவு புரதமும், வைட்டமின் டி-யும் அடங்கியுள்ளது. ஆனால் அவற்றில் கார்போஹைட்ரேட் கிடையாது. அதனால் உடல் எடை குறைக்க விரும்புபவர்கள். இந்த கடல் உணவை விரும்பி உண்ணலாம்.

எனவே இறால்களை தினமும் அல்லது வாரம் ஒரு முறை எடுத்துக் கொண்டால் சருமத்தை அழகாக்க பெரிதும் உதவும்.

தேவையான பொருள்கள்:

இறால் – கால் கிலோ
அரிசி – அரை கிலோ
எண்ணை – 150 கிராம்
டால்டா – ஸ்பூன்
நெய் – ஒரு ஸ்பூன்
வெங்காயம் – 3
தக்காளி – 4
பச்ச மிளகாய் – 4
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
மஞசள் – கால் ஸ்பூன்
உப்பு – தே.அளவு
எலுமிச்சை – ஒன்று
கொத்துமல்லி தழை – கால்கட்டு
புதினா – ஒரு கொத்து
பட்டை,ஏலம்,கிராம்பு – தலா ஒன்று
சிகப்பு கலர் பொடி – ஒரு பின்ச்

செய்முறை: 

எண்ணையை காய வைத்து பட்டை,கிரம்பு , ஏலம் போட்டு வெங்காயத்தை போட்டு நல்லவதக்கி இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு கிளறி சிம்மில் வைக்க வேண்டும்.

பிறகு கொத்து மல்லி புதினா, தக்காளி , பச்ச மிளகாய் அனைத்தையும் போட்டு இரண்டு நிமிடம் சிம்மில் விட்டு, மிளகாய்தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு கிளறி தக்காளியை வேகவிடவேண்டும்.

தக்காளி வெந்ததும் சுத்தம் செய்து வைத்துள்ள இறாலை போட்டு அரை எலுமிச்சை சாறு பிழிந்து சிம்மில் வைத்து வேகவிடவும்.

இப்போது அரிசியை முக்கால் வேக்காடில் வேக விட்டு அதில் அரைதேக்கரண்டி எண்ணை, எலுமிச்சை சாறு சேர்த்து உடனே தாளித்து வைத்துள்ள கூட்டில் கொட்டவேண்டும்.

கொட்டி தம்மில் விடவேண்டும் தம் போடுவதற்கென்றே உள்ள தட்டை வைத்து அதன் மேல் பிரியாணி சட்டியை வைத்து மூடி போட்டு வடித்த கஞ்சி சட்டியை அதன் மேல் வைத்து ஐந்து நிமிடம் விடவேண்டும்.

சிறிது கஞ்சி தண்ணீரில் சிகப்பு கலர் பொடியை கரைத்து மேலே தூவினால் போல ஊற்றி நெய்யையும் ஊற்றி மறுபடியும் மூடி போட்டு தம்மில் விட வேண்டும்.

Check Also

நாட்டுகோழி ரசம்

தேவையான பொருள்கள்: நாட்டு கோழி                   – ஒரு …