Home / சமையலறை / சில்லி சிக்கன்

சில்லி சிக்கன்

சில்லி சிக்கன்:

தேவையானவை

சிக்கன் – அரை கிலோ
பூண்டு – 5
பச்சைமிளகாய் – 5
எண்ணெய் – தேவையான அளவு
மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
உப்பு – சிறிதளவு

செய்முறை:

சிக்கனை நன்றாக சுத்தம் செய்து சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின்பு பூண்டு, பச்சை மிளகாய் இவை இரண்டையும் மிக்சியில் அரைத்து வைத்துக் கொள்ளவும். அதன் பிறகு ஒரு பாத்திரத்தில் சிக்கன், உப்பு, மிளகாய்த்தூள், அரைத்த விழுது இவை எல்லாவற்றையும் போட்டு நன்றாக கிளறி வைக்கவும் .கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிக்கன் கலவையை கொட்டி அடுப்பை சிம்மில் வைத்து கிளரி நன்கு வேக வைக்கவும். சிக்கன் வெந்து நன்கு சுண்டி வந்தவுடன் இறக்கி மல்லி இலை தூவி பரிமாறவும்.சுவையான சில்லி சிக்கன் ரெடி .

Check Also

நாட்டுகோழி ரசம்

தேவையான பொருள்கள்: நாட்டு கோழி                   – ஒரு …