செட்டிநாட்டு சிக்கன் பிரியாணி:
தேவையானவை:
பாசுமதி அரிசி – 600 கிராம்
சிக்கன் – அரை கிலோ
வெங்காயம் – கால் கிலோ
எண்ணெய் – 100 கிராம்
தக்காளி – 150 கிராம்
ஏலக்காய், கிராம்பு, பட்டை – தலா5
பச்சைமிளகாய் – 7
எலுமிச்சைச்சாறு – 1 ஸ்பூன்
மிளகாய்த்தூள் – அரை ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – தலா 75 கிராம்
தயிர் – 50 மில்லி
நெய், முந்திரிப்பருப்பு – தலா 50 கிராம்
புதினா, கொத்தமல்லி, உப்பு – சிறிதளவு
செய்முறை:
அரிசியை நன்றாக ஊறவைத்து வடித்துக் கொள்ளவும். அகலமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு ஏலக்காய், பட்டை, கிராம்பு, வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள், உப்பு, சிக்கன் துண்டுகள் போட்டு நன்கு கிளறவும்.
இதனுடன் நறுக்கிய புதினா, கொத்தமல்லி, எலுமிச்சைச்சாறு 4 கப் தண்ணீர் சேர்த்து மூடி வைக்கவும்.
ஒரு கொதி வந்ததும் வடித்த அரிசியை சேர்த்து அரை வேக்காடு பதம் வெந்ததும் நெய் சேர்த்து கிளறி மூடி அடுப்பை 5 நிமிடம் சிம்மில் வைத்திருந்து அணைக்கவும்.
பின்னர் அந்த பாத்திரத்தின் மீது சுடு தண்ணீர் பாத்திரத்தை வைத்து 20 நிமிடம் தம்மில் வைத்திருந்து எடுத்து நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு, சேர்த்து பரிமாறவும்.