Home / சமையலறை / நண்டு ரசம்

நண்டு ரசம்

நண்டு ரசம்:

தேவையானவை:

நண்டு – 2
மிளகுத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், எண்ணெய் – தலா 1 ஸ்பூன்
தக்காளி – 1
வெங்காயம் – 2
பூண்டு – 5 பல்
கறிவேப்பிலை, மஞ்சள்தூள், சோம்பு, உப்பு – சிறிது

செய்முறை:

நண்டை உடைத்து சுத்தம் செய்து, 2 முறை மஞ்சள்தூளில் பிரட்டி கழுவி சுத்தம் செய்துக் கொள்ளவும்.

குக்கரில் எண்ணெய் விட்டு சோம்பு, வெங்காயம், தக்காளி, நண்டு, மிளகாய்த்தூள், பூண்டு, மிளகுத்தூள், சீரகத்தூள், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.

பின்னர் 4 கப் தண்ணீர், உப்பு சேர்த்து 2 விசில் வரும் வரை வேகவைத்து இறக்கி பரிமாறவும்.

இது சளியை நீக்கும் நல்ல மருந்து.

Check Also

நாட்டுகோழி ரசம்

தேவையான பொருள்கள்: நாட்டு கோழி                   – ஒரு …