Home / சமையலறை / நாட்டுக் கோழி பிரியாணி

நாட்டுக் கோழி பிரியாணி

தேவையானவை:

பாசுமதி அரிசி                   – 600 கிராம்
நாட்டுக்கோழிக்கறி     – அரை கிலோ
வெங்காயம்                         – கால் கிலோ
எண்ணெய்                           – 100 கிராம்
தக்காளி                                  – 150 கிராம்
ஏலக்காய், பட்டை, கிராம்பு – தலா 5
பச்சைமிளகாய்               – 12
எலுமிச்சைச்சாறு           – 1 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது  – தலா 75 கிராம்
தயிர்                                          – 50 மில்லி
நெய், முந்திரிப்பருப்பு – தலா 50 கிராம்
டால்டா – 2 ஸ்பூன்
புதினா, கொத்தமல்லி, உப்பு – சிறிதளவு

செய்முறை:

அகலமான பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய், டால்டா, ஏலக்காய், பட்டை, கிராம்பு, முந்திரிப்பருப்பு, வெங்காயம், பச்சைமிளகாய், போட்டு வதக்கவும்.

பிறகு இஞ்சி பூண்டு விழுது, தயிர், தக்காளி, உப்பு, கோழிக்கறி, புதினா, கொத்தமல்லி, எலுமிச்சைச்சாறு 4 கப் தண்ணீர் சேர்த்து கிளறி மூடி வைக்கவும்.

ஒரு கொதி வந்ததும் ஊற வைத்து வடித்த அரிசியைச் சேர்த்து பாதியளவு வெந்ததும் நெய் சேர்த்து கிளறி 20 நிமிடம் தம்மில் வைத்து இறக்கி பரிமாறவும்.

Check Also

நாட்டுகோழி ரசம்

தேவையான பொருள்கள்: நாட்டு கோழி                   – ஒரு …