Home / சமையலறை / முட்டை பொரியல்

முட்டை பொரியல்

முட்டை பொரியல்:

தேவையான பொருள்கள்:

முட்டை               – 3
பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி             – 1 (பொடியாக நறுக்கியது)
மிளகாய்தூள் – 1 ஸ்பூன்
எண்ணேய்       – தாளிக்க தேவையான அளவு
உப்பு                     – தேவையான அளவு

செய்முறை:

முதலில் முட்டையை உப்பு போட்டு நன்கு நுரைவருவது போல் கலக்கவேண்டும். பின்பு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, கொஞ்சம் சோம்பு போட்டு அது வெடித்தவுடன்,
பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு நன்கு வதக்கிக்கொள்ளவேண்டும், பின்பு தக்காளியைப் போட்டு நன்கு வதக்கிக்கொள்ள வேண்டும்.இந்த வதக்கிய கலவையில் மிள்காய்தூள் போட்டு அதையும் ஒரு வதக்கல்.
இப்போது அடுப்பில் தீயை குறைத்துக் கொண்டும், கலக்கி வைத்துள்ள முட்டையை ஊற்றி நன்றாக அடிபிடிக்காமல் கிளறவேண்டும், முட்டை பொடியாக ஆகும் வரை.

Check Also

நாட்டுக் கோழி பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி                   – 600 கிராம் …