Home / ஆன்மிகம் / அட என்னங்கடா பழனி பஞ்சாமிர்தத்திற்கு வந்த சோதனை

அட என்னங்கடா பழனி பஞ்சாமிர்தத்திற்கு வந்த சோதனை

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி மலைக்கோவிலில் இங்கு பக்தர்களுக்கு பஞ்சாமிர்தம் இலவச பிரசாதமாக வழங்கப்படுகிறது. பழம், தேன், கற்கண்டு என சுவை மிகுந்த ஐந்து பொருட்களை சரியான கலவையில் சேர்த்து செய்வதே பஞ்சாமிர்தம் ஆகும்.

SONY DSC

ஜிஎஸ்டி வரி
ஜிஎஸ்டி வரிவிதிப்பால் பழனி பஞ்சாமிர்தம் விலைக்கு விற்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
திருப்பதி லட்டு மற்றும் அதனை தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள், முடி காணிக்கை வருமானம் ஆகியவற்றிற்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஜிஎஸ்டி வரிவிதிப்பிலிருந்து திருப்பதி லட்டுக்கு விளக்கு அளிக்க பட்டதுபோல் பழனி பஞ்சாமிர்தத்திற்கும் அதனை தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களுக்கும் விளக்குஅளிக்கப்படுமா….
பழனி மலைக்கோவில்
போகர் தமிழ் நாட்டிலுள்ள பிரபலமான சித்தராவார். இவர் நவபாஷாண முருகன் சிலையை செய்ததே மிகசுவையான தகவலாகும். அகத்திய முனிவருக்கும், போகருக்கும் தொழில் ரீதியாக போட்டியிருந்து வந்தது. அகத்தியர் தன்னை நாடி வருவோர்க்கு பஸ்பம்,வில்லை போன்று மருந்துகள் அளித்து நோயை குணப்படுத்தி வந்தார். போகரோ நவபாஷாணம் கொண்டு செய்த வில்லைகளை தன்னை நாடி வருவோர்க்கு அளித்துவந்தார்.

அகத்தியரின் மருந்துகளால் சீக்கிரமாக மக்கள் குணமடைந்து வந்தனர். ஆனால் போகரின் மருந்துகளுக்கு வீரியம் அதிகமானதால் மக்கள் உயிரிழந்தனர். இது கண்ட போகர் நவபாஷணத்தால் ஒரு சிலை செய்து அதன் மீது சந்தனத்தை பூசி அதிலிருந்து ஒரு குண்டுமணி அளவுக்கு வில்லையாக தன்னை நாடி வருபவர்களுக்கு அளித்து நோயை குணப்படுத்தி வந்தார் என்பது பழனியில் வழங்கி வரும் ஒரு செவிவழி செய்தியாகும்.
பழனி கோவிலில் நவபாஷாண சிலையே கர்பகிரஹத்தில் வைத்து வழிபடப்படுகிறது.

Check Also

பிளாஸ்டிக் அரிசி, முட்டை, நூடுல்ஸ், சர்க்கரை செய்வது எப்படி????

பிளாஸ்டிக் அரிசி: ”அரிசியைச் செயற்கையாகச் செய்ய முடியுமா…?” ”நிச்சயமாக முடியும். அரிசிக் குருணையோடு சில இயற்கைத் தாதுக்களையும், சத்துக்களையும் சேர்த்து …