Home / செய்திகள் / பாகிஸ்தான் மேல் பறக்கப்போகும் இந்தியாவின் எப்-16 ரக போர் விமானம்

பாகிஸ்தான் மேல் பறக்கப்போகும் இந்தியாவின் எப்-16 ரக போர் விமானம்

அமெரிக்காவின் பிரபல ஆயுத தயாரிப்பு நிறுவனமான லாக்ஹீட் மார்ட்டின் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ், எப்-16 ரக போர் விமானங்களை இந்தியாவில் தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளன. இந்தியாவின் முன்னணி தொழில் குழுமமான டாடாக்களுடன் இணைந்து போர் விமானங்களை தயாரிக்கிறது.

 

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்த விமான கண்காட்சியில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் ராணுவ வலிமையை சமன் செய்வதற்கும், வடக்கு பகுதியில் இருந்து வரும் அச்சுறுத்தல்களை இந்தியா எதிர்கொள்வதற்கும் இந்த ஒப்பந்தம் பயனளிக்கும்

அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் ஆற்றல் கொண்டது எப்-16 ரக அதிநவீன போர் விமானம்
எப்-16 தாக்குதல் வானூர்தியானது வான், தரை இலக்குகளைத் தாக்கவும், விமானிகளைப் பயிற்றுவிப்பதற்காகவும் வடிவமைக்கப்பட்ட பல்நோக்க வானூர்தியாகும்
தற்போது 26 நாடுகளில் மொத்தம் 3,200 எப்-16 விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. எப்-16 பிளாக் 70 என்கிற நவீன ரக போர் விமானம் இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ளது.

Check Also

அட என்னங்கடா பழனி பஞ்சாமிர்தத்திற்கு வந்த சோதனை

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி மலைக்கோவிலில் இங்கு பக்தர்களுக்கு பஞ்சாமிர்தம் இலவச பிரசாதமாக வழங்கப்படுகிறது. பழம், …