Home / செய்திகள் / ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி பார்த்துக்கொண்டே மிக்ஸியில் பாம்பை கவனிக்காமல் சட்டினி அரைத்த தமிழச்சி

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி பார்த்துக்கொண்டே மிக்ஸியில் பாம்பை கவனிக்காமல் சட்டினி அரைத்த தமிழச்சி

சமையலறையில் பெண்கள் சில முறை தவறுதலாக எதையாவது ஏடாகூடமாக செய்து விடுவது வழக்கம். எனவே பெண்கள் சமைக்கும் போது இந்த செய்தியை நினைவில் வைத்து கொள்வது நல்லது.

மதுரை தெற்கு பகுதியை சேர்ந்தவர் பாண்டியம்மா. இவர் சமீபத்தில் வீட்டில் சட்னி அரைக்க தக்காளி மற்றும் மசாலா பொருட்களை தயார் நிலையில் வைத்திருந்தார்.

அப்போது தவறுதலாக தக்காளியோடு ஒரு குட்டி பாம்பும் சுருண்டு படுததுள்ளது. அதனை பாண்டியம்மா கவனிக்கவில்லை. அப்படியே மிக்சியில் போட்டு அரைத்து விட்டு, அதனை இரவு வேலைக்கு செல்லும் கணவருக்கு உணவோடு சேர்த்து கொடுத்துள்ளார். வீட்டில் உள்ள மற்றவர்களும் சாப்பிட்டு உறங்க சென்று விட்டனர்.

பின்னர் அதனை வயலில் காவல் வேலை பார்க்கும் பெரிய மகனுக்கும் கொடுத்து அனுப்பி உள்ளார். சட்னியை சாப்பிடும்போது பெரிய மகனுக்கு பாம்பின் வால் கிடைத்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சட்னியை ஆராய்ந்து பார்த்தபோது அதில் பாம்பின் பாகங்கள் கிடைத்துள்ளது.
இதனால் பீதி அடைந்து உடனடியாக வீட்டில் உள்ளவர்களுக்கு தகவல் அனுப்பியுள்ளார் மேலும் பாண்டியம்மா மற்றும் அவரது குடும்பத்தினர் மருத்துவரை அனுகி பரிசோதனை செய்தனர். அதிர்ஷ்டவசமாக அவர்களில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

இந்நிகழ்வு அப்பகுதியில் வேகமாக பரவியதால் பாண்டியம்மா வீட்டிலேயே முடங்கியுள்ளார்.

குத்தணும் எஜமான் குத்தணும் இந்த பொண்ணுங்களே இப்படித்தான்.

Check Also

பாகிஸ்தான் மேல் பறக்கப்போகும் இந்தியாவின் எப்-16 ரக போர் விமானம்

அமெரிக்காவின் பிரபல ஆயுத தயாரிப்பு நிறுவனமான லாக்ஹீட் மார்ட்டின் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ், எப்-16 ரக போர் …