Home / தொழில்நுட்பம் / இந்தியாவில் மிகப்பெரிய சோலார் மின்சக்தி நிலையம்

இந்தியாவில் மிகப்பெரிய சோலார் மின்சக்தி நிலையம்

தமிழ் நாட்டின் கமுதி என்னும் இடத்தில் உலகின் மிகப்பெரிய சோலார் மின்சக்தி நிலையத்தை திறக்க இருப்பதாக அறிவித்துள்ளது . 648 மெகா வற்ஸ் அளவு மின்னுற்பத்தி செய்யக்கூடியதாகவும் 10 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டதாகவும் இது இருக்குமென அறிவிக்கப்படுகின்றது இதுகாலவரை கலிபோர்னியா டோப்பாஸ் பண்ணை சூரிய சக்தி மின்னிலையம்தான் 550மெகா வாட்ஸ் மின் உற்பத்தியுடன் உலகின் மிகப் பெரிய சூரிய மின்சக்தி ஆலையாக இருந்துள்ளது .

எட்டு மாதங்களில் கட்டி முடிக்கப்பட்ட இந்த நிலையம் ரோபோக்கள் மூலம் சுத்தம் செய்யப்படுகின்றன . இது முழுமையாக இயங்கும்போது 150,000 வீடுகளுக்கு மின்சார விநியோகம் வழங்க முடியும் என்று சொல்லப்படுகின்றது . இத் திட்டத்திற்கு 679மில்லியன் டொலர் செலவாகி உள்ளது . அடுத்த வருடத்திலிருந்து அமெரிக்கா சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்ததாக சோலார் சந்தையில் உலகின் மூன்றாவது மிகப்பெரிய நாடாக இந்தியா திகழுமென எதிர்பார்க்கப்படுகின்றது 2022 இல் இந்தியா 60 மில்லியன் வீடுகளுக்கு மின்சார விநியோகம் வழங்கும் குறியோடு இயங்கி வருகின்றது.

 

நன்றி : ஆன்லைன்உதயம்

Check Also

Jio-DTH ரூ.450. முதல் 6 மாதங்கள் இலவசம். பின்னர் ரூ. 360 சேனல்கள் 120 / மாதம்.

  ரிலையன்ஸ் ஜியோவின் தொலைத்தொடர்பு சேவைகளே அதற்கு மாபெரும் எடுத்துக்காட்டாகும். தொலைத்தொடர்பு துறையில் ஒரு விலைக்குறைப்பு புரட்சியை உண்டாக்கிய ரிலைன்ஸ் …