Home / தொழில்நுட்பம் / கடலுக்கு அடியில் ஓடப்போகும் புல்லட் ரயில்

கடலுக்கு அடியில் ஓடப்போகும் புல்லட் ரயில்

இந்தியாவின் முதல் புல்லட் ரயில்பாதை அமைப்பதற்கான முதற்கட்ட வேலைகள் ஆரம்பமாகிவிட்டன.
இந்தியாவின் முதல் புல்லட் ரயில், கடலுக்கு அடியில் ஓடப்போகிறது என்பதுதான் சிறப்பு. இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்து, கடலுக்கு அடியில் இந்த ரயிலில் பயணம் செய்தால், ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும் என்பது மட்டும் நிச்சயம். மும்பையில் இருந்து அகமதாபாத் இடையே 508 கி.மீ தூரத்துக்கு அமைக்கப்படும் இந்த புல்லட் ரயில் பாதையில், 7 கி.மீ தூரம் ஆழ்கடலின் அடியில் அமையப்போகிறது. தானே மற்றும் விரார் நகரங்களுக்கு இடையே 21 கி.மீ தூரத்துக்கு சுரங்கப்பாதை அமைய இருக்கிறது. இந்த இரு நகரங்களுக்கு இடையே உள்ள பகுதிகளில் பயிர்கள் பயிரிடப்படும் .
இந்த ரயில், அதிகபட்சமாக 350 கி.மீ வேகத்தில் செல்லும் என்பதால், இரு நகரங்களுக்கு இடையேயான தொலைவை 3 மணி நேரங்களில் எளிதாகக் கடக்கலாம். மேலும், இரண்டும் மெட்ரோ நகரங்கள் என்பதால், புல்லட் ரயில் போக்குவரத்து மேலும் பல வசதிகளை மேம்படுத்த உதவும். புல்லட் ரயிலால் பயண நேரம் வெகுவாகக் குறையும்.

train

இந்தத் திட்டத்தின் முதற்கட்டமாக, கடலின் அடியில் 70 அடி ஆழத்தில் உள்ள மண் படுகைகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுகள் தொடங்கிவிட்டன. 97,636 கோடி ரூபாய் செலவாகும் இந்தத் திட்டத்துக்கு, ஜப்பான் 81 சதவிகிதம் நிதி உதவி அளிப்பதோடு மட்டுமில்லாமல், ரயில் பாதை கட்டுமானம் மற்றும் இயக்கத்திலும் உதவி செய்யும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. நடைபெற்றுவரும் பரிசோதனைகள் முடிவடைந்ததும், ரயில் பாதை கட்டுமானத்தை வரும் 2018 -ம் ஆண்டில் தொடங்கி 2023- ம் ஆண்டில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
புல்லட் ரயில் தொழில்நுட்பத்தில் உலக அளவில் முன்னிலையில் இருப்பது, ஜப்பான் நாடுதான். அங்கு, 1964-ம் ஆண்டிலேயே அதிவேக ரயில்கள் ஓடத் துவங்கிவிட்டன. மேலும், கடலுக்கு அடியில் ரயில் பாதையை அமைப்பது என்பது நமக்கு வேண்டுமானால் புதிதாக இருக்கலாம். அவர்களுக்கு அது பழக்கமான ஒன்றுதான். 1988-ம் ஆண்டே ஜப்பானின் ஹொன்சு மற்றும் ஹொக்கிடோ தீவுகளுக்கு இடையே 54 கி.மீ தூரத்துக்கு ஆழ்கடலின் அடியில் செல்லும் இரு வழி ரயில் பாதையை வடிவமைத்து, அதில் புல்லட் ரயில் ஓட்டியவர்கள் ஜப்பானியர்கள். எனவே, இந்தியாவின் புல்லட் ரயில் சகாப்தத்தையும் சிறப்பாகத் தொடங்கிவைப்பார்கள்.

நன்றி :ஆன்லைன்உதயன்.

Check Also

Jio-DTH ரூ.450. முதல் 6 மாதங்கள் இலவசம். பின்னர் ரூ. 360 சேனல்கள் 120 / மாதம்.

  ரிலையன்ஸ் ஜியோவின் தொலைத்தொடர்பு சேவைகளே அதற்கு மாபெரும் எடுத்துக்காட்டாகும். தொலைத்தொடர்பு துறையில் ஒரு விலைக்குறைப்பு புரட்சியை உண்டாக்கிய ரிலைன்ஸ் …