Home / தொழில்நுட்பம் / தாய்ப்பால் எடுக்க ஒரு கருவி

தாய்ப்பால் எடுக்க ஒரு கருவி

குழந்தை பெற்ற பின், வேலைக்குப் போகும் தாய் அல்லது குழந்தைக்கு சில காரணங்களால் நேரடியாக பால் ஊட்ட முடியாத தாய் போன்றவர்களுக்கு ஆறுதலாக பல கருவிகள் வந்துள்ளன. ஆனால், அண்மையில் அறிமுகமான, ‘வில்லோ ஸ்மார்ட் பிரெஸ்ட் பம்ப்’ வடிவமைப்புக்கும், பயன்படுத்துவதில் உள்ள எளிமைக்கும் பாராட்டைப் பெற்றிருக்கிறது.சிறிய, ‘கப்’ வடிவிலிருக்கும் இந்த பம்பை பால் சுரக்கும் மார்பில் வைத்து மேலே ஆடையை அணிந்துகொண்டு, தாய் தன் வீட்டு வேலையை பார்க்கலாம். எத்தனை வேகமாக பாலை எடுக்க வேண்டும் என்ற வேக அளவை, ‘செட்’ செய்துவிட்டு, பொத்தானை அழுத்தினால் போதும். கப்பின் உள்ளே இருக்கும் சிறிய மோட்டார் பம்ப் பாலை உறிஞ்சி, ஒரு பையில் மெதுவாக நிரப்பிவிடும். பையில் சேகரிக்கப்பட்ட பாலை, புட்டியில் ஊற்றி குழந்தைக்கு உடனே ஊட்டலாம் அல்லது குளிர் பதன பெட்டியில் வைத்திருந்து, பின் ஊட்டலாம். அடுத்த சில மாதங்களில், அமெரிக்காவில், விற்பனைக்கு வரவிருக்கும் இந்த அருமையான கருவிக்கு, விலை வைத்திருப்பது சற்று அதிகம் என்கிறார்கள் .

 

 

நன்றி : ஆன்லைன்உதயம்

Check Also

Jio-DTH ரூ.450. முதல் 6 மாதங்கள் இலவசம். பின்னர் ரூ. 360 சேனல்கள் 120 / மாதம்.

  ரிலையன்ஸ் ஜியோவின் தொலைத்தொடர்பு சேவைகளே அதற்கு மாபெரும் எடுத்துக்காட்டாகும். தொலைத்தொடர்பு துறையில் ஒரு விலைக்குறைப்பு புரட்சியை உண்டாக்கிய ரிலைன்ஸ் …