Home / புதிய பார்வை / ஆத்துல ரத்தம் ஓடுதாம்.. நம்புடா கைப்புள்ள

ஆத்துல ரத்தம் ஓடுதாம்.. நம்புடா கைப்புள்ள


குருதியருவி (Blood Falls) என்பது கிழக்கு அண்ட்டார்ட்டிக்காவில் உள்ள டெய்லர் பனியாற்றின் நுனியில் செம்பழுப்பு நிறத்தில் வெளிப்படும் உப்புநீர் வடிவு ஆகும். இரும்பு ஆக்சைடு கலந்திருப்பதால் சிவப்பு நிறம் தோன்றுகின்றது. இக் குருதியருவி டெய்லர் பனியாற்றில் இருந்து கிழக்கு அண்ட்டார்டிக்காவில் உள்ள விடோரியா லாண்டு என்னும் இடத்தில் மக்மர்டோ உலர் பள்ளத்தாக்கு (McMurdo Dry Valleys) பகுதியில் உள்ள டெய்லர் பள்ளத்தாக்கில் உள்ள பனி மூடிய மேற்கு பானி ஏரி (Lake Bonney) மீது விழுகின்றது.
இரும்பு-அதிகம் உள்ள மிகு உப்புநீர் (மீயுப்புநீர்) அவ்வப்பொழுது பனியின் இடையே உள்ள இடுக்குகளின் வழியே வெளிப்படுகின்றது. பனியாற்றின் அடியே ஏறத்தாழ 400 மீ ஆழத்தில் இருந்து உப்புநீர் வெளிப்படுகின்றது.

1911 இல் ஆத்திரேலிய| புவியியலாளர் தாமசு கிரிபித் டெய்லர் என்பார் சிவப்புநிற படிவுகள் இருப்பதைக் கண்டுபிடித்தார். முதன்முதலில் இவ்விடத்தை கண்டுபிடித்ததால் இவர் பெயராலேயே இவ்விடம் அழைக்கப்படுகின்றது.
பனிக்கட்டியின் இடையே உள்ள இடுக்குகளின் வழியே கிடைத்த உபுப்புமிகுந்த நீரை (மீயுப்புநீரை) சோதித்துப் பார்த்த பொழுது அது ஆக்சிசன் இல்லாமல் (ஆக்சிசன் அற்று) இருந்ததையும், சல்பேட்டும், இரும்பு மின்மவணுக்களும் (ferrous ion) கூடுதலாக இருந்ததை அறிய முடிந்தது.
டெய்லர் பனியாற்றின் அடியாழத்தே எவ்வாறு கடுங்குளிரில், ஒளிபுகமுடியாத ஆழத்தில், ஆக்சிசன் இல்லா சூழலில் உப்புநீரில் எவ்வாறு மில்லிய ஆண்டுகளாக நுண்ணுயிர்கள் வாழ்ந்திருந்தன
என்பது இயற்கையின் பிரமிப்பு

Check Also

சித்தோர்கார் கோட்டை

சித்தோர்கார் கோட்டை இராஜஸ்தான் மாநிலத்தின் மேவார் பகுதியில் சித்தோகார் மாவட்டத்தின் தலைநகரான சித்தோர்கார் நகரத்தில் சித்தோர்கார் கோட்டை அமைந்துள்ளது. சித்தோர்கார் …