Home / புதிய பார்வை / கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட இயேசுவின் புனித உடற்போர்வை (Shroud of Turin)

கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட இயேசுவின் புனித உடற்போர்வை (Shroud of Turin)


புனித உடற்போர்வை இத்தாலியின் தூரின் நகரில் பாதுகாக்கப்பட்டு வணக்கம் செலுத்தப்படுகின்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஓர் அடக்கத் துணித் துண்டு ஆகும். இத்துணியில் பதிந்திருக்கின்ற மனிதனின் உருச்சாயல் அம்மனிதன் சிலுவையில் அறையப்பட்டு, வேதனையுற்ற தோற்றத்தில் உள்ளதாகத் தெரிகிறது.
இந்த உடற்போர்வை இத்தாலியின் தூரின் நகரில் புனித திருமுழுக்கு யோவான் பெருங்கோவிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இத்துணியில் பதிந்திருக்கின்ற மனிதனின் உருவச்சாயல் சிலுவையில் அறையுண்டு இறந்து, துணியால் பொதிந்து கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட இயேசுவின் உருச்சாயலாக இருக்கலாம் என்று பலர் கருதுகின்றனர். இந்த உருச்சாயல் இயல்பான தோற்றத்தைவிட கருப்பு-வெள்ளை ஒளிப்படத்தின் எதிர்மறை வடிவத்தில் அதிகத் தெளிவாகத் தெரிகிறது.

உடற்போர்வை பற்றிய சர்ச்சை
அறிவியலார், இறையியலார், வரலாற்றாளர், ஆய்வாளர் போன்ற பலதுறை வல்லுநர்கள் நடுவே இந்த உடற்போர்வை இன்றும் சர்ச்சைக்கு உரியதாகவே உள்ளது.
இந்த உடற்போர்வை இயேசு வாழ்ந்து இறந்த கி.பி. முதலாம் நூற்றாண்டைச் சார்ந்தது என்று கூறுவோர் ஒருபக்கம், இது பிற்காலத்தில் உருவாக்கப்பட்டது என்று கூறுவோர் மறுபக்கம் என்று சர்ச்சை நடந்துகொண்டிருக்கிறது.
அறிவியல் முறையில் இந்த உடற்போர்வையை ஆய்ந்தவர்கள் பல கொள்கை அணுகுமுறைகளை முன்வைக்கின்றனர். அவற்றுள் கீழ்வருவன அடங்கும்:

•வேதியியல் ஆய்வு
•உயிரியல் ஆய்வு
•மருத்துவத் தடவியல் ஆய்வு
•ஒளியியல் ஆய்வு

கத்தோலிக்க திருச்சபையின் நிலைப்பாடு
இந்த உடற்போர்வை உண்மையிலேயே இயேசுவைக் கல்லறையில் அடக்கம் செய்தபோது அவருடைய உடலைப் பொதிந்த போர்வைத் துணிதானா என்பது குறித்து கத்தோலிக்க திருச்சபை இதுவரை அதிகாரப்பூர்வ நிலைப்பாடு எடுக்கவில்லை. அதாவது திருச்சபை இந்தப் போர்வை இயேசுவின் உடலை அடக்கம் செய்தபோது அந்த உடலை மூடிய துணியே என்று சாதிக்கவோ, அதை மறுக்கவோ இல்லை.
ஆயினும், 1958இல் திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ் இந்த உடற்போர்வையில் தோன்றுகின்ற முகச்சாயலைக் காட்டுகின்ற உருப்படத்தை இயேசுவின் முகச்சாயலாகக் கொண்டு வணக்கம் செலுத்துவதற்கு இசைவு அளித்தார்.

புனித உடற்போர்வை எவ்வாறு உருவாக்கப்பட்டது
தூரின் நகர புனித உடற்போர்வை 4.4 × 1.1 மீட்டர் அளவுடையது (14.3 × 3.7 ft).
இத்துணி மென்மையான சணல் நார் கொண்டு, மீன்முள் நெய்தல் பாணியில் நெய்யப்பட்டுள்ளது.
இத்துணியின் சிறப்புக் கூறு அதில் தெரிகின்ற மனித உருவம் ஆகும். நிர்வாண நிலையில் உள்ள ஒரு மனிதனின் உடலைத் தலையிலிருந்து காலடிவரை முன்புறமும் பின்புறமும் போர்த்தி, அந்த உடலின் சாயல் இத்துணியில் பதிந்ததுபோல் தோற்றம் உள்ளது.
அடிவயிற்றின் கீழ்ப்பகுதியில் அம்மனிதன் தன் கைகளை ஒன்றன்மேன் ஒன்றாக வைத்திருக்கும் தோற்றம் தெரிகிறது. தலையின் முன்பார்வையும் பின்பார்வையும் துணியின் நடுப் புள்ளியில் எதிரெதிராக
இளஞ்சிவப்பு நிறம்கொண்ட கறைகள் துணியில் தெரிவது அத்துணியால் போர்த்தப்பட்ட மனிதனின் உடல் சிலுவையில் அறையப்பட்டு, பல காயங்கள் ஏற்பட்டு அவர் இரத்தம் சிந்தியதைக் காட்டுகின்றன. இது விவிலியத்தின் நற்செய்தி நூல்களில் இயேசு துன்பங்கள் அனுபவித்து, கசையடி பட்டு, முண்முடி சூடப்பட்டு, சிலுவையைச் சுமந்து சென்று, அச்சிலுவையில் அறையப்பட்டு உயிர்துறந்ததையும் அவருடைய உடலின் வலது பக்கத்தில் ஈட்டி ஊடுருவியதையும் காட்டுகின்ற காட்சியை அப்படியே சித்தரிப்பதாகப் பலர் கருதுகின்றனர். எனவே, இந்த உடற்போர்வை இயேசுவின் உடலைக் கல்லறையில் மூடியிருந்த போர்வையே என்று அவர்கள் கருதுகின்றனர்.

புனித உடற்போர்வையில் தெரிகின்ற உடற்கூறுகளும் கறைகளும்
•ஒரு கையின் மணிக்கட்டில் வட்டவடிவத்தில் பெரியதொரு காயம் தெரிகிறது. ஆணியால் துளைக்கப்பட்டதுபோல் உள்ளது. மறுகையின் மணிக்கட்டு காயம் தெரியும் கையின் கீழ் உள்ளதால் அதன் காயம் தெரியவில்லை.
•தொண்டைப் பகுதி புடைத்திருக்கிறது. அது, சிலுவையில் தொங்கிய மனிதன் இறந்தபின் காயத்திலிருந்து வெளியான இரத்த சிவப்பு அணுக்கள் மற்றும் நிணநீர் தேங்கியதால் ஏற்பட்டிருக்கலாம்.
•நெற்றி மற்றும் உச்சந்தலைப் பகுதியில் முண்முடியால் ஏற்பட்டதுபோன்ற சிறு காயங்களின் அடையாளங்கள் உள்ளன.
•கசை நார்களின் நுனியில் சிறு உலோகத்துண்டுகள் இருந்து, அக்கசையால் அடித்தபோது ஏற்பட்ட காயங்கள் உடலின் மேல் பகுதி மற்றும் கால் பகுதிகளில் காணப்படும் காயங்களின் அடையாளங்களாக உள்ளன.
•கடுமையாகத் தாக்கப்பட்டதால் முமம் வீங்கியிருத்தல்.
•மேற்கைகளிலும் முழங்கைகளிலும் இரத்தம் வழிந்தோடியதற்கான அடையாளங்கள் உள்ளன. இது சிலுவையில் அறையப்பட்டதால் ஏற்பட்டிருக்க வேண்டும்.
•காலடிகளில் ஆணிகொண்டு அறைந்ததால் ஏற்பட்ட காயங்கள்.

புனித உடற்போர்வை தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுதல்
சுற்றுச்சூழலால் சேதம் ஏற்படுவதைத் தடுக்கும் பொருட்டு, கடந்த 40 ஆண்டுகளாக புனித உடற்போர்வை மக்களின் பார்வைக்கும் வணக்கத்திற்கும் திறந்து வைக்கப்படவில்லை.
ஆனால், 2013ஆம் ஆண்டு, மார்ச்சு 30ஆம் நாள் புனித சனிக்கிழமையன்று புனித உடற்போர்வை மக்களின் பார்வைக்காக தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.

Check Also

பீர் குடிக்கலாம் வாங்க…..

பீர் உலகின் பழமைவாய்ந்த மிக அதிகமாக உட்கொள்ளப்படும் மதுபானம் மேலும், நீர், தேனீருக்கு அடுத்தப்படியாக அதிகமாக உட்கொள்ளப்படும் குடிவகையாகும் தானியங்களிலிருந்து …