Home / புதிய பார்வை / சித்தோர்கார் கோட்டை

சித்தோர்கார் கோட்டை

சித்தோர்கார் கோட்டை
இராஜஸ்தான் மாநிலத்தின் மேவார் பகுதியில் சித்தோகார் மாவட்டத்தின் தலைநகரான சித்தோர்கார் நகரத்தில் சித்தோர்கார் கோட்டை அமைந்துள்ளது. சித்தோர்கார் இந்தியாவின் பெருங்கோட்டைகளில் ஒன்றாகும். மேலும் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாகும். சித்தோர்கார் கோட்டையை அடைய மலைப்பாங்கான வளைந்து நெளிந்து செல்லும் பாதை வழியே நடக்கவேண்டும். 7ஆம் நூற்றாண்டை சேர்ந்த கோட்டையாகும். 180 மீட்டர் உயரத்தில், 280 ஹெக்டர் பரப்பளவில், மலைப்பாங்கான இடத்தில் சித்தோர்கார் கோட்டை அமைந்துள்ளது. இதனடியில் பெரோச் ஆறு பாய்கிறது.

ஏழு ஈட்டிகள்
இந்த கோட்டைக்கு ஏழு பிரம்மாண்டமான, உலோக ஈட்டிகள் பொருத்தப்பட்ட வாசல்கள் உள்ளன.
அந்த ஏழு ஈட்டிகளுக்கு ஹிந்து கடவுளர்களின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது
இந்த கோட்டையின் உட்புறம் ராணி பத்மினி மற்றும் மஹாராணா கும்பா ஆகியோரின் அரண்மனைகள் அமைந்துள்ளன. மேலும் பல அழகிய கோயில்களையும் இந்த கோட்டைக்குள் காணலாம்.
மழைக்காலங்களில் கோட்டையில் மழைநீர் வீணாகாமல் இருக்க வடிகால்கள் மூலம் ஒன்றுதிரட்டி கோட்டையில் அமைக்க பட்டுள்ள செயற்கை நீரோட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது

கூட்டுத் தீக்குளிப்பு விழா
இக்கோட்டை எதிரிகளால் கைப்பற்றும் நிலையில் இருக்கும் போது,
இராசபுத்திர மன்னர்களின் மனைவிகள் மற்றும் இராசபுத்திர குலப் பெண்கள், படைவீரர்களின் கையில் சிக்கிச் சீரழிவதைத் தடுக்கும் நோக்கில் பெரும் தீ வளர்த்து அதில் கூட்டாக தீக்குளிப்பதே கூட்டுத் தீக்குளிப்பு நிகழ்வாகும்.

கூட்டுத் தீக்குளிப்பு நிகழ்வை இராசபுத்திர பெண்கள் பெருமையாகக் கருதினார்கள்.
இரவில் கோட்டையில் நடக்கும் விழாவின் போது, திருமணமான இராசபுத்திர குலப் பெண்கள் திருமண உடைகள் அணிந்து கொண்டு தங்கள் குழந்தைகளுடன் கூட்டாகத் தீக்குளிப்பர். விழா நடந்த அடுத்த நாள் காலையில், கோட்டையில் இருக்கும் இராசபுத்திர படைவீரர்கள் குளித்து விட்டு, குங்குமப்பூ நிறத்திலான செவ்வாடைகள் உடுத்திக் கொண்டு, கூட்டாகத் தீக்குளித்து இறந்த தங்கள் குல பெண்டிர் மற்றும் குழந்தைகளின் சாம்பலை நெற்றியில் இட்டு, துளசி இலைகளை மென்று கொண்டு, கைகளில் போர்க் கருவிகளை ஏந்தி, கோட்டைக் கதவைத் திறந்து கொண்டு வெளியேறி, ஜெய் பவானி என வீர முழக்கம் எழுப்பியவாறு, எதிரிகளை வெற்றி கொள்ளும் வரை அல்லது மடியும் வரை வீரமாகப் போரிடுவர்.

Check Also

பீர் குடிக்கலாம் வாங்க…..

பீர் உலகின் பழமைவாய்ந்த மிக அதிகமாக உட்கொள்ளப்படும் மதுபானம் மேலும், நீர், தேனீருக்கு அடுத்தப்படியாக அதிகமாக உட்கொள்ளப்படும் குடிவகையாகும் தானியங்களிலிருந்து …