Home / புதிய பார்வை / பிரமிப்பூட்டும் பிரமிடு மர்மங்கள்!

பிரமிப்பூட்டும் பிரமிடு மர்மங்கள்!


கி.மு 2700க்குப் பிறகு கட்டத் துவங்கிய எகிப்தியர்கள் கி.மு 1700 வரை பிரமிடுகளைக் கட்டினர். மூன்றாம் வம்ச காலத்தில் யோசர் மன்னர் காலத்தில் ஆறு மஸ்தபாக்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி முதல் பிரமிடு ஒன்றை கட்டினர். எகிப்தின் பெரிய பிரமிடுகள் கிசா என்றவிடத்தில் உள்ளன. பெரும்பாலான பிரமிடுகள் நைல் ஆற்றின் மேற்குப் புறத்திலேயே கட்டப்பட்டன.2008ஆம் ஆண்டுப்படி, இதுவரை 135 பிரமிடுகள் எகிப்தில் கண்டறியப்பட்டுள்ளன.

நிலவிலிருந்து பார்த்தால் தெரிம்
சீனப் பெருஞ்சுவரைப் போலவே நிலவிலிருந்து பார்த்தால் தெரியக் கூடியது. கிட்டத்தட்ட 5000 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு இயற்கைச் சீற்றங்களை எதிர்கொண்டும், அதனால் எந்தவித பாதிப்புகளும் அடையாமல், தொன்மை உலகின் மர்மமான ஒரு சரித்திரத்தின் அடையாளமாக இன்றளவும் நிமிர்ந்து நிற்கிறது பிரமிடு. இந்தப் பிரமிடுகளை உருவாக்கியது யார், என்ன காரணத்திற்காக இவற்றை உருவாக்கினார்கள், இந்தப் புதிரான கட்டிட அமைப்பில் ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன என்பது பற்றி விஞ்ஞானிகளிடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. வரலாற்று ஆய்வாளர்கள் ஒன்றைக் கூற, விஞ்ஞானிகள் அதற்கு எதிராக ஒன்றைக் கூற என்று காலம் காலமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்தப் பிரமிடுகளைச் சுற்றி எந்தவிதமான மலைகளோ, பாறைகளோ, கற்குன்றுகளோ கிடையாது. நகரத்தின் அருகில் மட்டுமல்ல, தொலைவிலும் கூட இல்லை. ஒரு புறம் பாலைவனமும், மறுபுறம் கடலும் தான் இந்நகரைச் சுற்றி உள்ளது. அப்படியானால் இந்தப் பிரமிடை எப்படி உருவாக்கியிருப்பார்கள், இத்தனை லட்சம் கற்களை எங்கிருந்து கொண்டு வந்திருப்பார்கள், இவ்வளவு பெரிய உயரத்திற்கு அவற்றை எப்படி எழுப்பியிருப்பார்கள் என்றுதான் வரலாற்றாய்வாளர்களும், விஞ்ஞானிகளும் ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர். மேலும் இந்த அளவுக்கு அருகில் பூமியில் எங்காவது கற்களைத் தோண்டி எடுத்து இவற்றைக் கட்டியிருப்பார்கள் என்று வைத்துக் கொண்டால் கூட, அவ்வாறு தோண்டி எடுத்த இடங்களில் மிகப் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால் பலமைல் சுற்றளவிற்கு அப்படி எந்த ஒரு பெரிய பள்ளமும் இல்லை. ஆகவே எப்படி இவற்றை உருவாக்கியிருப்பார்கள் என்று இன்னமும் விஞ்ஞானிகள் மண்டையை உடைத்துக் கொண்டுதான் உள்ளனர்.
ஒரு சிலர் இந்தவகைப் பிரமிடுகள் மனிதர்களால் கட்டப்படவில்லை; மனிதர்களை விடப் பல்வேறு அதிசய ஆற்றல்கள் கைவரப் பெற்ற வேற்றுக் கிரக மனிதர்களால் கட்டப்பட்டவை என்றும் கூறுகின்றனர். இந்தக் கூற்றில் உண்மை இருக்கலாம் என்று கூறும் ரஷ்ய விஞ்ஞானிகள், ஸ்பிங்க்ஸ் பிரமிடைப் போன்ற ஓர் பிரமிடு உருவச்சிலை செவ்வாய்க் கிரக பிரமிடுகளுக்கு அருகே காணப்படுவதாகக் கூறியிருக்கின்றனர். அவர்கள், செவ்வாய்க் கிரகத்தில் சைடோனிக் எனக் குறிக்கப்படும் ஒரு பகுதியில் காணப்படும் பிரமிடு போன்ற அமைப்புகளுக்கும், எகிப்தின் பிரமிடுகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கக் கூடும் என்றும் கருதுகின்றனர்.
ஆனால் இவை மட்டும் தான் பிரமிடா? வெறும் உடலைப் பாதுகாக்கும் சமாதியாகத் தானா அவ்வளவு பெரிய கட்டிடங்களைக் கட்டியிருப்பார்கள்? – என்ற கேள்விகள் சிந்தனைக்குரியன.

பிரமிடாலஜி:-
வியப்பூட்டும் பிரமிட் மர்மங்கள் எண்ணிலடங்காமல் போய் விட்டதாலும் அதன் பயன்கள் மிகப் பெரும் அளவில் இருப்பதாலும் பிரமிடாலஜி என்ற தனிப் பிரமிட் இயலே தோன்றி விட்டது. பிரமிட் என்சைக்ளோபீடியா என்னும் பிரமிட் பேரகராதியும் இப்போது வந்து விட்டது. அப்படி என்ன மர்மங்கள்? பயன்கள்?
நெப்போலியன்:-
மாவீரனான நெப்போலியன் உலக அதிசயங்களில் மிகவும் தொன்மையான கிரேட் பிரமிடின் முக்கிய உள்ளறையான மெயின் சாம்பரில் ஒரு இரவைக் கழித்தான். காலையில் வெளியே வந்த அவன் எல்லையற்ற பிரமிப்புக்குள்ளாகி இருந்தான். என்ன நடந்தது என்று கேட்ட போது அதைச் சொன்னால் நீங்கள் நம்ப மாட்டீர்கள் (you wont believe me if I telll you) என்றான். பிரமிட் கட்டிட அமைப்பு:-
அமெரிக்க டாலர் மர்மம்:-
அமெரிக்க டாலரில் (ஒரு டாலர் நோட்டு) பிரமிட் படம் இருப்பது அதன் மர்ம ஆற்றலைப் பயன்படுத்திக் கொள்வதற்காகவே! அமெரிக்க டாலரின் இன்றைய செல்வாக்கிற்கு அதிலுள்ள பிரமிடே காரணம்! அதில் உள்ள பூர்த்தியாகாத பிரமிட் அமெரிக்கா எப்போதும் வளர்ந்து கொண்டே இருக்கும் என்பதை உணர்த்துகிறது.
எகிப்தின் மிகப்பெரிய பிரமிடாகிய கிசா
கிசா நகரம் மொத்தமாக மூன்று பிரமிட்டுக்கள் இருந்தபோதிலும் மிகவும் உயரமான மகா கிசா மட்டும் கீழ்வரும் தகவல்களில் தரப்படுகின்றது.
கிசா பிரமிட்டு மொத்தம் 13 ஏக்கர் பரப்பில் பரந்துள்ளது.
மகா கிசா (Giza) பிரமிட்டு (படத்தில் உள்ளது) இதன் அடிப்பரப்பு 1,134 அடியாகவும் உயரம் 486 அடி (138.75 மீற்றர்) என அமைந்துள்ளது.
23 லட்சம் கற்களால் அமைக்கப்பட்டது கிரேட் பிரமிட். அதன் ஒவ்வொரு கல்லின் எடையும் 2 டன் முதல் 30 டன் வரை இருக்கிறது. இந்தக் கற்களால் 30 எம்பயர் ஸ்டேட் பில்டிங்குகள் கட்டலாம்
இந்தக் கற்கள் ஒன்றொடொன்று பொருத்தப் பட்டிருப்பது அதிசயக்கத் தக்க அளவில் உள்ளது! இவை அரை மில்லி மீட்டர் – அதாவது ஒரு மயிரிழை கூட இடைவெளி இன்றி இருப்பது அதிசயத்திலும் அதிசயமே! இந்தக் கற்களால் 30 எம்பயர் ஸ்டேட் பில்டிங்குகள் கட்டலாம்!
பிரிமிடின் மொத்தக் கற்களின் எடையான ஐம்பத்தி மூன்று லட்சம் டன்னை 1,000,000,000,000,000 (ten to the power of 15) என்ற எண்ணால் பெருக்கினால் பூமியின் எடை கிடைக்கிறது! பிரமிடின் வெவ்வேறு அளவு விகிதாசாரங்கள் ஆங்காங்கே “பை” எனப்படும் 3.142 என்ற அளவையும் தங்க விகிதம் என்று கூறப்படும் 1.618 என்ற அளவையும் காண்பிக்கின்றன.
நான்கு திசைகளில் முகம் கொண்டுள்ள பிரமிட்டின் வாசல் வடதிசையில் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் வாசல் 9 அடி சதுரமாக நிலத்தில் இருந்து 150 அடி உயரத்திலும் அமைந்துள்ளது.
பிரமிட்டின் வாசலில் இருந்து 324 அடி நீண்ட உள்மனை மூன்று தளங்களில் உள்ள 3மண்டபங்களுக்கு செல்கின்றது.
பிரமிட்டின் முதன்மை கட்டுமானத்தில் இரண்டு மில்லியன் கற்கள் ஒவ்வொன்றும் 1/50அங்குல இடைவெளியில் பொருத்தப்பட்டுள்ளது.
கட்டி முடிவுற்ற காலத்தில் மிகவும் பளபளப்பாக இருந்த பிரமிட்டு 100 மைல் தொலைவிற்கு சாதாரண கண்களுக்கு புலப்படுமாறு இருந்துள்ளது.
கட்டிடம் முடிவுற்ற காலம்முதல் பலகாலமாக புராதன மக்களின் வணக்கத் தலமாக இருந்துள்ளது.
பிரமிட்டின் முக்கிய இராட்சதகல் கட்டுமானம் தவிர 115,000 மணல் உதவியுடன் பளபளபு செய்யப்பட்ட சுண்ணாம்பு கற்கள் மேலதிகமாக பாவித்துள்ளனர்.
மேல் கூறிய சுண்ணாம்பு கற்கள் ஒவ்வொன்றும் 1/100 அங்குல இடை வெளியில் பொருந்த வைத்துள்ளனர்.
கிசா பிரமிட்டு நைல் நதி கரையிலும் எகிப்து நாட்டின் எல்லையிலும் உள்ளது. கிசா என்பதன் அர்த்தம் அரபு மொழியில் எல்லை என்பதாகும்.
கட்டுவத்ற்கு உபயோகித்த கற்களினால் 20 எம்பயர்ஸ்டேட் காட்டிடம் கட்டமுடியும் அல்லது பூமியை சுற்றிவர ஒரு நடைபாதை அமைப்பதற்கு சமம் எனவும் இதன் பிரமாண்டம் வர்ணிக்கப் படுகின்றது.
3800 வருடங்களாக உலகின் உயர்ந்த கட்டிடம் என்ற இடத்தை பிடித்திருந்தது.
கடந்த காலங்களில் உலகின் 7 அதிசையங்களில் ஒன்றாக இருந்து வரும் பிரமிட்டுக்கள் எகிப்து நாட்டில் உள்ளன.
இறந்தவரின் உடலைத் தனியாக ஒரு கூடாரத்திற்கு எடுத்துச்சென்று, மரணக் கட்டிலில் அவரைக்
கிடத்தி பேரீச்சை மதுவாலும் நைல் நதி நீராலும் கழுவுவார்கள்.

மம்மி படுத்துதல்


உடலின் இடது பக்கத்தில் அறுத்து உள்ளே இருக்கும் பகுதிகளை வெளியே எடுப்பார்கள்.
நுரையீரல், கல்லீரல், வயிற்றுப் பகுதிகள், குடல் பகுதிகள் எடுக்கப்பட்டு கல் உப்பில் பதப்படுத்தப்படும்
இருதயம் அறிவின் இருப்பிடமாக எகிப்தியர்களால் கருதப்பட்டதால் அது உடலுக்குள்ளேயே இருக்கும்.
ஒரு வளைந்த கம்பியை மூக்கின் வழியாக விட்டு உடைத்து, மூளையை எடுத்துவிடுவார்கள். (உண்மையில் அறிவு என்பது மூளை தொடர்புடையது என்ற அறிவு அந்தக் காலத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது)
உடல், கல் உப்பால் மூடப்படும்.
நாற்பது நாட்கள் கழித்து உடலை மறுபடியும் நைல் நதி நீரால் கழுவி, அதன்மீது வாசனை எண்ணெய்களைத் தடவுவார்கள். உடல் இப்போது தன்னுடைய ஈரப்பதத்தை முழுவதுமாக இழந்திருக்கும். அதன் பிறகு மரணக்கோவில் என்றழைக்கப்படும் லூசார் கோவிலின் பலிபீடத்தில் சில நாட்கள் வைப்பர். இது
நேரடியாக சூரிய ஒளி படும் இடமாதலால் பாலைவன வெயிலின் வெப்பம் காரணமாக  உடலின் ஈரப்பதம் முழுமையாக ஆவியாகி இப்போது காய்ந்த உடல் மாத்திரம் இருக்கும்.

உடற்பகுதிகள் தனித்தனியாக ஜாடிகளில் (canopic jars) வைக்கப்படும்.
உடற்பகுதிகள் தனித்தனியாக ஜாடிகளில் (canopic jars) வைக்கப்படும்.
உடலை, பிசின் தடவிய துணியால் இறுக்கமாகச் சுற்றுவார்கள். தலை, கைகள், கால்கள், உடல்பகுதி தனித் தனியாகச் சுற்றப்படும்.இறுதியில் பிரமிடுகளின் மய்யப்பகுதியில் அரச மரியாதையுடன்
எடுத்துச்சென்று அடக்கம் செய்யப்படும், அரசர் பயன் படுத்திய அனைத்துப்
பொருள்களும் பிரமிடில் வைக்கப்படும். இதில் தங்க வைர நகைகள் மற்றும் இதர
விலையுயர்ந்த பொருட்களும் அடங்கும்.

Check Also

பீர் குடிக்கலாம் வாங்க…..

பீர் உலகின் பழமைவாய்ந்த மிக அதிகமாக உட்கொள்ளப்படும் மதுபானம் மேலும், நீர், தேனீருக்கு அடுத்தப்படியாக அதிகமாக உட்கொள்ளப்படும் குடிவகையாகும் தானியங்களிலிருந்து …