Home / புதிய பார்வை / புத்தரின் மார்பில் பிள்ளையார் – அதிசய புத்தர்

புத்தரின் மார்பில் பிள்ளையார் – அதிசய புத்தர்


டயான் டான் புத்தர் அல்லது பெரிய புத்தர் என்பது ஹொங்கொங், லந்தாவு தீவில், நொங் பிங் எனும் உயர்நிலப் பகுதியில், ஒரு மலைக்குன்றின் மீது அமைக்கப்பட்டுள்ள, ஒரு பிரமாண்டமான வெண்கலப் புத்தர் சிலையாகும்.

இந்த புத்தர் சிலை 112 உயரமானதாகும்.

இதன் எடை 250 மெட்ரிக் டொன் ஆகும்.

இந்தப் புத்தர் சிலை போ லின் மடாலயத்தின் முன்பாகக் கட்டப்பட்டுள்ளது. இப்புத்தர் சிலையும் போ லின் மடாலய வளாகமும், மலைத்தொடர்கள் சூழ, அடர்ந்த கானகத்தின் நடுவே இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் உள்ளன.

202 துண்டுகளாக செய்யப்பட்ட புத்தர் சிலை
இந்த புத்தர் சிலையின் கட்டுமாணப் பணிகள் 1990ம் ஆண்டு ஆரம்பம் ஆகின. 1993 டிசம்பர், 29ம் திகதி இதன் கட்டுமாணப் பணிகள் நிறைவுற்றது. இந்த புத்தரின் சிலை ஒரே முழுச்சிலையாக அல்லாமல், 202 துண்டுகளாக செய்யப்பட்டு, பின்னர் தற்போது சிலை வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் கொண்டுவந்து பொருத்தப்பட்டது. அத்துடன் இந்த சிலையை தாங்கும் திறனுக்கு ஏற்ப உறுதியான இரும்பு வலையங்கள் அமைக்கப்பட்டே சிலை வைக்கப்பட்டது.
சீனாவில் உள்ள ஐந்து பிரமாண்டமான பௌத்தக் கோயில் கட்டடங்களில் “டயான் டான்” கோயில் கட்டமும் ஒன்றாகும்.
நிலமட்டத்தில் இருந்து இந்த புத்தர் சிலைக்கு செல்ல 268 படிகள் உள்ளன. இருப்பினும் வயதான மற்றும் உடல்நலம் குறைந்தோர் செல்வதற்கான வசதியும் உள்ளது.

புத்தரின் மார்பில் பிள்ளையார்
புத்தரின் மார்பில் பிள்ளையார் குறி இடப்பட்டுள்ளது. அத்துடன் இந்த புத்தரின் முகம் வடக்கு நோக்கியதாக இருக்கின்றது. குறிப்பாக ஏனைய புத்தர் சிலைகள் தெற்கு நோக்கியே கட்டப்படுவதாகவும், இச்சிலை மட்டும் வடக்கு நோக்கியதாக இருப்பது ஒரு சிறப்பு என கூறப்படுகின்றது.

Check Also

பீர் குடிக்கலாம் வாங்க…..

பீர் உலகின் பழமைவாய்ந்த மிக அதிகமாக உட்கொள்ளப்படும் மதுபானம் மேலும், நீர், தேனீருக்கு அடுத்தப்படியாக அதிகமாக உட்கொள்ளப்படும் குடிவகையாகும் தானியங்களிலிருந்து …