Home / புதிய பார்வை / பெர்முடா முக்கோணம்

பெர்முடா முக்கோணம்

மரண நீர்ப்பரப்பு – வரலாற்றின் புதிர்
பெர்முடா முக்கோணம் (சைத்தானின்முக்கோணம்)

பெர்முடா,ப்ளோரிடா மற்றும் போர்டேரிகோ ஆகிய பிரதேசங்களுக்கு இடைப்பட்ட முக்கோண வடிவ கடல் பகுதியே பெர்முடா முக்கோணம் எனபடுகிறது.. இந்த பகுதியினூடாக செல்லும் கப்பல் மற்றும் விமானகளில் பல மாயமாக மறைவதும்,விபத்துகுள்ளவதும் புரிந்து கொள்ளமுடியாத புதிராக உள்ளது..
இந்த மர்மங்களுக்கு பலர் பலவிதமான விளக்கம் கொடுத்தனர்..சிலரின் கருத்துப்படி இந்த கடல் பகுதியில் ராட்சச சுழிகள் இருப்பதாகவும் அவைதான் கப்பல்களை விழுங்குவதாகவும்,வேறு சிலரோ இந்த பகுதியில் எதோ ஒரு அமானுஷ்ய சக்தி உலாவுவதாகவும் அவைதான் இந்த கானாமல்போதல்களுக்கு காரணம் எனவும் கூறுகின்றனர்…

ஆராய்சியாளர்களின் கருத்து
கப்பல்கள் சரியாக பெர்முடா முக்கோண பகுதியில் வரும் போது மர்மமான முறையில் மூழ்குவது பலருக்கு ஆச்சர்யமாக இருந்தது, பல வருட ஆராய்ச்சிக்கு பின் கடலுக்கடியில் இருக்கும் எரிமலையின் வெடிப்பின் காரணமாக ஏற்படும் பூகம்பமே அதற்கு காரணம் என அறியப்பட்டது, பூமி அதிர்வால் கடலில் ஏற்படும் அலைகள் சுனாமியை போன்று ராட்சசதனமாக இருக்கும், கவனிக்க இது கரை தொடவேண்டும் என்ற அவசியமில்லை, நடுகடலிலேயே அமைதியாகி விடலாம், அதனை “ரோக் வேவ்ஸ் (rock waves)” என்று அழைக்கிறார்கள், ஒரு சிறிய அலைக்கு பின் வரும் பெரிய அலை அதனுடன் சேர்ந்து ராட்சசஅலையாக உருவாகி பெரிய கப்பலை கூட கவிழ்ந்துவிடும்!,… கப்பலிலிருந்து தளத்திற்கு எந்த செய்தியும் வராதது அவர்களுக்கு இன்னொரு ஆச்சர்யம்!
கடலுக்கு அடியில் இருந்து வெளிப்படும் மெதேன் வாயு காரணமாக தண்ணீரின் அடர்த்தி குறைவடைந்து கப்பல்கள் மூழ்குவதாகவும் தெரிவிக்க படுகிறது….
சரி, கடல் மார்க்கமாக செல்லும் கப்பல்கள் காணாமல் போக, எரிமலை, பூகம்பம், ராட்சச அலை, கடல் நீரோட்டம் என பல காரணங்கள் இருக்கின்றன, ஆனால் வான் மார்க்கமாக செல்லும் விமானங்கள் எப்படி காணாமல் போகின்றன என்ற கேள்விக்கு விடை தேடும் முயற்சியில் இறங்கினர் விஞ்ஞானிகள்.
இந்த முக்கோண பகுதியில் மின்காந்த புலம் ஏனைய இடங்களை விட வலுவாக இருப்பதாக ஆராய்சியாளர்கள் கூறுகின்றனர்….வலுவான மின்காந்த புலத்தால் விமானங்களின் திசையறி கருவிகள் குழப்பமடைந்து அவை வேறு திசையில் பயணித்து விபத்துக்குள்ளவதாக விஞ்ஜானிகள் தெரிவிகின்றனர்..

வளைகுடா நீரோடை
வளைகுடா நீரோடை என்பது மெக்சிகோ வளைகுடாவில் தோன்றி, பின் புளோரிடா நீரிணைப்பு வழியாக, வட அட்லாண்டிக் கடல் வரை செல்லும் கடல் ஓடையாகும். இது கடலுக்குள் இருக்கும் ஒரு ஆறு போன்றது. ஒரு ஆறு போலவே, இது மிதக்கும் பொருட்களை சுமந்து செல்கிறது. சிறு விமானம் நீரில் விழுந்து விட்டாலோ அல்லது ஏதேனும் படகு எந்திரக் கோளாறினால் நின்று விட்டாலோ அது தெரிவிக்கப்பட்ட இடத்தில் இருந்து நீரோடை வழியே சுமந்து செல்லப்படும். இது தான் விட்ச்கிராஃப்டு படகுக்கு டிசம்பர் 22, 1967 ஆம் ஆண்டில் நிகழ்ந்தது. கடற்கரையில் இருந்து ஒரு மைல் (1.6 கிமீ) தூரத்தில் மியாமி மிதவை குறியீடு அருகே இப்படகு பழுதடைந்ததாக கூறப்பட்டது. ஆனால் கடலோரக் காவல்படை கப்பல் அங்கு சென்றபோது அது அந்த இடத்தில் இல்லை.

அமானுட விளக்கங்கள்
புகழ்பெற்ற மொழியியலாளரும் அமானுட நிகழ்வுகள் குறித்த பல்வேறு புத்தகங்களின் ஆசிரியருமான சார்லஸ் பெர்லிட்ஸ், இந்த அசாதாரண விளக்கத்துடன் உடன்பட்டார். முக்கோணப் பகுதியில் நிகழும் தொலைதல்களுக்கு அமானுட அல்லது விளக்கமுடியாத சக்திகள் தான் காரணம் என்று அவர் கூறினார்.[11] திசைகாட்டி மாறுதல்கள்
பல முக்கோண நிகழ்வுகளில் கூறப்படும் பதப் பிரயோகங்களில் ஒன்று திசைகாட்டி பிரச்சினைகள். அசாதாரணமான காந்த அலைகள் இப்பகுதியில் இருக்கலாம் என்று சிலர் சித்தாந்தப்படுத்தினாலும்,.

மனிதத் தவறு
விமானம் அல்லது கப்பல் காணாமல் போவதற்கு அதிகாரப்பூர்வ விசாரணைகளின் போது கூறப்படும் காரணங்களில் மிக அதிகமானது மனிதத் தவறாகும். வேண்டுமென்றோ அல்லது தற்செயலாகவோ, மனிதர்கள் தவறு செய்வார்கள் என்பது அறிந்ததே. இது பெரும் துயரச் சம்பவத்தில் சென்று முடிகிறது. இதற்கு பெர்முடா முக்கோணப் பகுதி இழப்புகள் விதிவிலக்கல்ல. உதாரணமாக வி.ஏ.ஃபாக் 1972 ஆம் ஆண்டில் தொலைந்து போனதற்கு ஆவியாகும் பென்ஸின்|பென்சீன் கழிவை சுத்தப்படுத்துவதற்கு முறையான பயிற்சி இல்லாதிருந்ததை கடலோரக் காவல் படை ஒரு காரணமாக சுட்டிக் காட்டியது

குறிப்பிடத்தக்க சம்பவங்கள்
பிளைட் 19
1945 ஆம் வருடம் அமெரிக்காவை சேர்ந்த F19 வகை போர் விமானங்கள் ஐந்து பெர்முடா முக்கோணத்தின் மீது பறந்தன, ரோந்து பணிக்காக கிழக்கு நோக்கி 1700 கிலோமீட்டர் வரை செல்லவது அவர்களது இலக்காக இருந்தது, கிளம்பிய 2 மணி நேர அளவில், ஐந்து விமானங்களும் தள கட்டுபாட்டில் இருந்து மறைந்தது, மொத்தமாக ஐந்து விமானங்களும் காணாமல் போயின!, நேரடியாக தளத்திற்கு தொடர்பு இல்லையென்றாலும் விமானிகள் தொடர்பு கொள்ள முயற்சித்திருப்பது தெரியவந்தது, அருகில் சென்று கொண்டிருந்த பெரிய கப்பல்கள் அவர்களை சிக்னலை ரிசீவ் செய்திருக்கிறார்கள், அவர்கள் செல்ல வேண்டிய திசையில் இருந்து மாறி ஐந்து விமானங்களும் வேறு திசையில் பறந்திருப்பது தெரியவந்தது!, அவர்கள் பெர்முடா முக்கோணத்தில் விழவில்லை, அருகில் இருக்கும் தீவுகளில் எதாவது ஒரு சதுப்புநிலகாடுகளில் விழந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் சொன்னாலும் இதுவரை விமானத்தின் ஒரு பாகம் கூட கிடைக்கவில்லை என்பது இன்னும் ஆச்சர்யம்!
இந்த மர்மத்திற்கு மர்மம் சேர்க்கும் விதமாக, காணாமல் போன கப்பலுக்கு உதவ 13 பேர் கொண்ட தேடுதல் மற்றும் மீட்புக்கான கப்பல்படை விமானம் அனுப்பப்பட்டது. ஆனால் அதற்குப் பின் அந்த விமானத்தில் இருந்தே ஒரு தகவலும் இல்லை. பின்னர், புளோரிடா கடற்கரையில் சுற்றிக் கொண்டிருந்த ஒரு கப்பலில் இருந்தவர்கள் இந்த விமானம் ரோந்தில் இருந்திருக்கக் கூடிய அந்த தருணத்தில் ஒரு வெடிப்பு நிகழ்ந்ததை கண்டதாக தெரிவித்தனர்.

மேரி செலஸ்டி
1872 ஆம் ஆண்டில் 282 டன்கள் எடை கொண்ட இருதூண்கப்பல் மேரி செலஸ்டி மர்மமான முறையில் தொலைந்து போனது.

எலன் ஆஸ்டின்
1881 ஆம் ஆண்டில் எலன் ஆஸ்டின் ஒரு அநாதையாக வந்த கப்பலைக் கண்டார். அதில் மீட்பு ஊழியர்களை நிறுத்தி, அதனுடன் சேர்ந்து நியூயார்க் வர முயற்சி செய்தார். இந்த அநாதைக் கப்பல் திரும்பவும் மீட்பு ஊழியர்கள் இன்றி தோன்றியதாகவும், திரும்பவும் இரண்டாவது முறையாக மீட்பு ஊழியர்களுடன் காணாமல் போனதாகவும் சிலர் விவரிக்கின்றனர்.

ஸ்டார் டைகர் மற்றும் ஸ்டார் ஏரியல்
அசோர்ஸில் இருந்து பெர்முடா செல்கையில் ஜனவரி 30, 1948 அன்று ஒரு பயணிகள் விமானம் காணாமல் போனது. பெர்முடாவில் இருந்து ஜமைக்காவின் கிங்ஸ்டன் நகருக்கு பறந்து செல்கையில் ஜனவரி 17, 1949 அன்று இன்னொரு பயணிகள் விமானம் காணாமல் போனது. இரண்டுமே தென் அமெரிக்க பிரிட்டிஷ் ஏர்வேஸ் இயக்கிய ஒரே ரக பயணிகள் விமானங்கள் ஆகும்.
இங்கிலாந்தில்,புறாக்கள்,பறக்கவிடும்,போட்டி,நடைபெற்று,வருகிறது.,இந்த,நிலையில்,ஸ்காட்லாந்தில்,இருந்து,புறா,போட்டியாளர்கள்,திர்ஸ்க்,,வெதர்பி,,கான்செட்,ஆகிய,பகுதிகளில்,இருந்து,232,புறாக்களை,பறக்க,விட்டனர்.,ஆனால்,,அவற்றில்,13,புறாக்கள்,மட்டுமே,திரும்பி,வந்தன.,மற்றவை,மாயமாகி,விட்டன.,எனவே,,காணாமல்,போன,புறாக்கள்,பெர்முடா,பகுதியில்,கடலுக்குள்,உள்ளே,இழுக்கப்பட்டிருக்கலாம்,என்ற,பீதி,ஏற்பட்டுள்ளது.,இதற்கிடையே,,நீண்டதூரம்,பறக்க,முடியாமல்,பல,புறாக்கள்,கடலுக்குள்,விழுந்து,இறந்து,இருக்கலாம்,அல்லது,வேறு,இடங்களில்,தங்கி,இருக்கலாம்,என்றும்,கருதப்படுகிறது.,எனவே,பெர்முடா,பற்றிய,மர்மங்கள்,இன்னும்,தொடர்கிறது.
அமெரிக்க கடற்படையின் படி, இம்முக்கோணம் இல்லை என்றும் பெயர் புவியியல் பெயர்கள் அமெரிக்க வாரியம் மூலம் அங்கீகரிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த மறைதல்களுக்கு அமானுட ஆற்றல் அல்லது உலகத்திற்கு அப்பாற்பட்ட உயிர் களின் செயல்திறன் காரணமாக இருப்பதாக பொதுமக்கள் நம்புகின்றனர்.

முக்கோணக் கதையின் வரலாறு
முக்கோண சிந்தனையை எழுத்தில் வெளிப்படுத்திய பத்திரிகைகளில் வந்த முதல் கட்டுரை என்றால் ஈ.வி.டபிள்யூ. ஜோன்ஸ் செப்டம்பர் 16,1950 அன்று வெளியிட்ட செய்தியைத்தான் குறிப்பிட வேண்டும்
யார் என்ன கூறினாலும் பெர்முடா முக்கோணம் பல மர்மங்களை கொண்ட பயங்கர இடமாகவே இன்றும் கருத படுகின்றது….

Check Also

பீர் குடிக்கலாம் வாங்க…..

பீர் உலகின் பழமைவாய்ந்த மிக அதிகமாக உட்கொள்ளப்படும் மதுபானம் மேலும், நீர், தேனீருக்கு அடுத்தப்படியாக அதிகமாக உட்கொள்ளப்படும் குடிவகையாகும் தானியங்களிலிருந்து …