Home / புதிய பார்வை / மிரண்டு போன பிட்சா ஹட் தெறிக்கவிட்ட இந்திய நகரம்

மிரண்டு போன பிட்சா ஹட் தெறிக்கவிட்ட இந்திய நகரம்


ஜோத்பூர் இந்திய மாநிலமான ராஜஸ்தானில் உள்ள இரண்டாவது பெரிய நகரம் ஆகும். இது ஆங்கிலேய ஆட்சியில் முந்தைய ராஜஸ்தானின் தலைநகரமாகவும் மார்வார் என அறியப்படும் அரசாட்சிப் பகுதியின் தலைநகரமாகவும் இருந்தது. சோத்பூர் ஒரு பிரபலமான சுற்றுலாத்தலமாகும். பல அரண்மனைகள், கோட்டைகள் மற்றும் கோயில்கள், தார் பாலைவனத்தின் வித்தியாசமான இயற்கைக்காட்சி அமைப்பு ஆகியவை இந்நகரின் சிறப்பாகக் கூறப்படுகிறது.

சூரிய நகரம்
இந்நகரத்தின் பொலிவு காரணமாக சூரிய நகரம் என சோத்பூர் அழைக்கப்படுகிறது. ஆண்டு முழுவதும் இங்கு வெப்பமான பருவநிலை காணப்படுகிறது.

நீல நகரம்
மெஹ்ரன்கார்ஹ் கோட்டையைச் சுற்றியிலுள்ள வெள்ளையடிக்கப்பட்ட வீடுகளின் கருநீல சாயத்தின் காரணமாக நீல நகரம் எனவும் இது அழைக்கப்படுகிறது.
ஜோத்பூரின் பழைய நகரம் தடிப்பான கற்சுவர்களால் சூழப்பட்டுள்ளது.

கண்டிப்பாக பார்க்க வேண்டியவை

•  மெஹ்ரன்கார்ஹ் கோட்டை
•  ஓசியன் கோவில்
•  மந்தோர்
•  கல்யானா ஏரி மற்றும் தோட்டம்
•  பல்சமந்த் ஏரி
•  சர்தார் சமந்த் ஏரி மற்றும் அரண்மனை
•  தாவா (தோலி) வனப்பகுதி

திருவிழாக்கள்
•  மார்வார் விழா
•  கங்கார்
•  தீஜ்
•  நாக் பன்ச்சமி நிகழ்ச்சி
•  மாஹாவீர் ஜெயந்தி
•  ஷெய்ட்லா மாட்டா

சுவைகளின் இருப்பிடம்
பல சுவைமிக்க இந்திய உணவு சோத்பூரில் இருந்து வெளிவந்தன எனலாம். அவற்றில் மனநிறைவளிக்கும்
மக்ஹானியா லஸ்ஸி,
மாவா கச்சோரி,
பாயாஜ் கச்சோரி,
சூடான & காரசாரமான மிர்சிபடா
(உருளைக்கிழங்கு, ஆனியன், சில்லி மற்றும் கிராம்பிளார் கொண்டு தயாரிக்கப்படும்)
பன்ச்குட்டா,
லப்ஸி (கோதுமை, பனைவெல்லம் மற்றும் நெய்யுடன் தயாரிக்கப்படும் ஒரு சிறப்புவகை உணவு),
மிர்சா கரி (சில்லி மற்றும் பாலைவனப் பகுதியில் வளரும் ஒரு சிறப்பு வகை காய்கறியான கச்சரைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது)
பாரம்பரியமான “மக்ஹன்படா ” முதல் பெங்காலி “ரசகுல்லாஸ் ” வரையுள்ள உயர்தரமான இனிப்புகள் மூலமும் சோத்பூர் அறியப்படுகிறது.

வெளிநாட்டு உணவுகளை தூக்கியெறிந்த முதல் இந்திய நகரம்
பிட்சா ஹட், மெக்டொனால்ட்ஸ், பாஸ்கின் ராபின்ஸ் போன்ற மற்றும் பல பிரபலமான வாணிகர்கள் அவர்களது கடைகளை இங்கு திறந்துள்ளனர். பிட்சா ஹட் இங்கு தோல்வியடைந்ததன் காரணமாக அவர்களது கடைகள் இங்கு மூடப்பட்டுவிட்டன.

Check Also

பீர் குடிக்கலாம் வாங்க…..

பீர் உலகின் பழமைவாய்ந்த மிக அதிகமாக உட்கொள்ளப்படும் மதுபானம் மேலும், நீர், தேனீருக்கு அடுத்தப்படியாக அதிகமாக உட்கொள்ளப்படும் குடிவகையாகும் தானியங்களிலிருந்து …