Home / புதிய பார்வை / வெந்நீரூற்றில் குளித்தால் வெள்ளையாயிடுவோமா

வெந்நீரூற்றில் குளித்தால் வெள்ளையாயிடுவோமா


வெந்நீரூற்று அல்லது வெந்நீர்ச்சுனை (Geyser) என்பது நீரானது, நீராவியுடன் சேர்ந்து, குறிப்பிட்ட இடைவெளிகளில் கிளர்ந்தெழுந்து, மேல்நோக்கி மிகவும் வேகத்துடன் வெளியேற்றப்படும் ஒரு நீர் நிலையாகும். குறிப்பிட்ட சில நிலத்தடி நீர்ப்படுகைகளில் மட்டுமே இவ்வாறான வெந்நீரூற்றுகள் காணப்படுகின்றன. புவியின் ஒரு சில இடங்களில் மட்டுமே இவ்வகையான வெந்நீரூற்றுகள் இருப்பதனால், இது ஒரு அரிதான தோற்றப்படாகவே கருதப்படுகிறது. பொதுவாக இவை இயக்கநிலையிலுள்ள எரிமலைகள் இருக்கும் இடங்களில், பாறைக் குழம்புகளுக்கு அண்மையாகவே தோன்றும். நிலத்தடி நீரானது நிலத்தினடியில் கிட்டத்தட்ட 2000 மீட்டர் ஆழத்தில் சூடான பாறைகளைத் தொட்டுச் செல்லும். அப்போது உருவாகும் அழுத்தத்தோடு கூடிய கொதிக்கும் நீரானது சூடான ஆவியுடன் கூடிய நீராக, நிலத் துளைகளூடாக வேகத்துடன் வெளியேறும் செயற்பாட்டினால் இந்த வெந்நீரூற்றுகள் உருவாகின்றன.
உலகில் இருக்கும் கிட்டத்தட்ட 1000 வெந்நீரூற்றுகளில் 50% அமெரிக்காவிலுள்ளது.

உலகில் இருக்கும் வெந்நீரூற்று ஒரு பார்வை
உலகின் பிரம்மாண்ட வெந்நீரூற்று. இது அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பெரிய வெந்நீரூற்றும் நியூசிலாந்து, டொமினிக்கா ஆகிய நாடுகளை அடுத்த உலகிலுள்ள மூன்றாவது பெரிய வெந்நீரூற்றும் ஆகும்.
கிட்டத்தட்ட 370 feet (110 m) விட்டமும் 121 feet (40 m) ஆழமும் கொண்டது. இது நிமிடத்திற்கு 160 °F (70 °C) நீரை 560 US gallons (2,100 L) என்ற அளவில் வெளித்தள்ளுவாதாக கணக்கிடப்பட்டுள்ளது.

யெலோஸ்டோன் தேசியப் பூங்கா, ஐக்கிய அமெரிக்கா
இங்கு அதிகளவிலான வெந்நீரூற்றுகள் உள்ளன. உலகிலுள்ள வெந்நீரூற்றுகளில் 50% இங்கேயே காணப்படுகிறது. ஆயிரக் கணக்கில் நீர் மேலே பீறிட்டு எழும்பாத வெந்நீரூற்றுகளும், 300-500 நீர் பீறிட்டு எழும் வெந்நீரூற்றுகளும் இங்கே உள்ளன.

வெந்நீரூற்றுப் பள்ளத்தாக்கு, உருசியா
இங்கே அதிகளவிலான நீரை வெளியே உயரத்துக்கு எழுப்பாத வெந்நீரூற்றுகளுடன் சேர்ந்து, கிட்டத்தட்ட 200 வெந்நீரூற்றுகள் உள்ளன.

எல் தாத்தியோ வெந்நீரூற்று
என்பது தென்னமெரிக்காவில் உள்ள சிலி நாட்டில் கடல் மட்டத்திலிருந்து 4200 மீ. உயரத்திலுள்ள பள்ளத்தாக்கில் கிட்டத்தட்ட 80 வெந்நீரூற்றுகள் காணப்படுவதுடன், இது மூன்றாவது பெரிய வெந்நீரூற்று நிலப்பகுதியாகக் கருதப்படுகிறது.

தாவுப்போ எரிமலை வலயம், நியூசிலாந்து
நியூசிலாந்தின் வடக்குத் தீவிலுள்ள தாவுப்போ எரிமலை வலயத்தில் (Taupo Volcanic Zone) வெந்நீரூற்றுகள் உள்ளன. இங்குள்ள வெந்நீரூற்றுக்கள் 500 மீட்டர் உயரம் வரை மேல்நோக்கிப் பீறிட்டுச் செல்லக் கூடியவையாகும்.

ஐசுலாந்து
ஐசுலாந்து அதிகளவில் வெந்நீரூற்றுகளைக் கொண்ட ஒரு நாடாகும். ஐசுலாந்து தீவு முழுமையிலும், இவ்வகையான வெந்நீரூற்றுகள் பரவிக் காணப்படுகின்றன. 5-8 நிமிடங்களுக்கு ஒரு தடவை 30 மீட்டர் உயரத்திற்கு நீரை வெளியேற்றக் கூடிய ஒரு வெந்நீரூற்று இசுற்றோக்கூருக்கு (Strokkur) அருகில் காணப்படுகின்றது.

இயங்கு நிலையிழந்த வெந்நீரூற்று
அமெரிக்காவின் நெவாடா பகுதியில் காணப்பட்ட இரு பெரிய வெந்நீரூற்றுகள், அப்பகுதியில் உருவாக்கப்பட்ட புவி வெப்பஆற்றல் மின் உற்பத்தி நிலையத்தால் அழிந்து போனது.
கடந்த நூற்றாண்டில் நியூசிலாந்தில் உள்ள பல வெந்நீரூற்றுகள் மனிதர் நடவடிக்கைகளால் அழிக்கப்பட்டன. பல இயற்கையாகவும் தன் இயங்கு நிலையை இழந்தது.

வணிக நோக்கிலான பலன்கள்
மின்சார உற்பத்தி, சுடுநீர்த் தேவை, சுற்றுலாத்துறை போன்ற வணிகநோக்கிலான தேவைகளுக்கு இந்த வெந்நீரூற்றுக்கள் பயன்படுகின்றன.
பொதுவாகவேய வெந்நீரூற்றுகளில் குளித்தால் தோலின் நிறம் வெண்மை அடைவதாக ஐஸ்லாந்து மக்களால் நம்பப்படுகிறது.

Check Also

பீர் குடிக்கலாம் வாங்க…..

பீர் உலகின் பழமைவாய்ந்த மிக அதிகமாக உட்கொள்ளப்படும் மதுபானம் மேலும், நீர், தேனீருக்கு அடுத்தப்படியாக அதிகமாக உட்கொள்ளப்படும் குடிவகையாகும் தானியங்களிலிருந்து …