Home / செய்திகள் / கல்லூரி மாணவி காயத்ரி சுதா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்

கல்லூரி மாணவி காயத்ரி சுதா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்

பெற்றோர் எதிர்ப்பை மீறி வீட்டில் இருந்து வெளியேறி இரண்டு கல்லூரி மாணவிகள் பெங்களூருவில் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூர் கல்லூரி ஒன்றில் பி.காம் படித்துவரும் மாணவிகள் சுதா மற்றும் காயத்ரி. இவர்களுக்கு இடையேயான கல்லூரி நட்பு நாளைடைவில் காதலாக மாறியுள்ளது இந்நிலையில் காயத்ரிக்கு
அவருடைய வீட்டில் திருமண ஏற்பாடு செய்திருக்கின்றனர்.

திருமண ஏற்பாட்டில் விருப்பம் இல்லாத காயத்ரி, தான் சுதாவை காதலிப்பதாகவும் அவரையே திருமணம் செய்து கொள்ள போவதாகவும் வீட்டில் தெரிவித்திருக்கிறார்.

இதனால் அதிர்ச்சியடைந்த காயத்ரியின் குடும்பதினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். பெற்றோர் எதிர்ப்பதால் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர் இதன்படி சுதாவும், காயத்ரியும் வீட்டில் இருந்து தப்பிவந்து அங்குள்ள கோவில் ஒன்றில் திருமணம் செய்திருக்கின்றனர்.

ஓரினச்சேர்க்கை திருமணம் மற்றும் லெஸ்பியன் திருமணம் ஐபிசி 377 பிரிவின் படி இந்தியாவில் அங்கீகரிக்கப்படாத ஒன்று. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

பெற்றோர்கள் தங்கள் மகள்களை மீட்டுத்தர காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் போலீசார் வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்க மறுத்துவிட்டனர்.

லெஸ்பியன் திருமணம் என்ற காரணத்தை சொல்லாமல், பெண்வீட்டார் அவர்களுக்கு மனநிலை சரியில்லை என்று புகார் தந்ததால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என காவல் துறையினர் விளக்கமளித்துள்ளனர்.

இதுக்கு பேரு தான் அழகுல மயங்குறதோ……..

Check Also

நடிகையை பார்த்து கவலைப்படும் சக கலைஞர்கள்

பெரிய முதலாளி நிகழ்ச்சி மூலம் மிக உயரத்துக்கு சென்றுவிட்டாராம் ஓவியமானவர். இதனால், தினமும் பார்ட்டிகளுக்கு சென்று வருகிறாராம். நடிகையை முன்பு …