Home / வேலைவாய்ப்பு / ஆவின் பால் நிறுவனத்தில் ஓட்டுநர் வேலைக்கான பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஆவின் பால் நிறுவனத்தில் ஓட்டுநர் வேலைக்கான பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆவின் பால் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.1/2017
பணி: கனரக வாகன டிரைவர் (Heavy Vehicle Driver)
காலியிடங்கள்: 05

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி:இலகுவாகன டிரைவர்( Light Vehicle Driver)
காலியிடங்கள்: 01
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200

வயதுவரம்பு: 18 – 30க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதி மற்றும் ஓட்டுநர் தேர்வின் மூலம் பெற்றுள்ள மதிப்பெண்கள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.aavinmilk.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விரைவு அல்லது பதிவு அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

General Manager, Villupuram – Cuddalore District, Co-Operative Milk Producers’ Union Ltd., Vazhudhareddy, Kandamanadi(PO), Villupuram – 605 401.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர் கடைசி தேதி: 21.07.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.aavinmilk.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும்.

Check Also

பேங்க் ஆப் பரோடாவில் அதிகாரி வேலை :விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.05.2017

பேங்க் ஆப் பரோடா வங்கியில் நாடு முழுவதும் காலியாக உள்ள 400 புரபேஷனரி அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிடங்களின் …