Home / வேலைவாய்ப்பு / ராணுவத்துக்கான ஆள்சேர்ப்பு முகாம்: தஞ்சையில் ஆக.2-ல் தொடக்கம்……..

ராணுவத்துக்கான ஆள்சேர்ப்பு முகாம்: தஞ்சையில் ஆக.2-ல் தொடக்கம்……..

ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு முகாம் தஞ்சாவூரில் ஆகஸ்ட் 2 முதல் 10 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி திருச்சி கண்டோன்மென்ட் பகுதியிலுள்ள ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகம் சார்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

பணி: ராணுவத் தொழில்நுட்ப வீரர் தொழில்நுட்பப் பிரிவு ( ஏஎம்என், ஏவிஎன், எக்ஸாமினர்)
செவிலிய உதவியாளர்
சரக்கறைக் காவலர்
டிரேட்ஸ்மேன்
கிளார்க்

ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறும் இடம்:
தஞ்சாவூர் அன்னை சத்யா மாவட்ட விளையாட்டு மைதானம்.

நடைபெறும் நாள்:
ஆகஸ்ட் 2 முதல் 10 ஆம் தேதி வரை முகாம் நடைபெறும்.

முகாமிற்கு அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்:
அரியலூர், கன்னியாகுமரி, கரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, பெரம்பலூர், ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, தஞ்சாவூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருவாரூர், விருதுநகர் ஆகிய 14 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்தவர்களும் பங்கேற்கலாம்.

இந்த முகாமில் பங்கேற்க தகுதி உடையவர்கள் http://WWW.JO​I​N​I​N​D​I​A​N​A​R​MY.NIC.IN​ என்ற அரசு இணையதளத்தில் ஜூன் 18 முதல் ஜூலை 17 ஆம் தேதி வரை ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

ஜூலை 17 ஆம் தேதிக்குப் பிறகு விண்ணப்பிக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Check Also

பேங்க் ஆப் பரோடாவில் அதிகாரி வேலை :விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.05.2017

பேங்க் ஆப் பரோடா வங்கியில் நாடு முழுவதும் காலியாக உள்ள 400 புரபேஷனரி அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிடங்களின் …