Home / புதிய பார்வை / வேற்று கிரஹ வாசிகளின் விமானத்தளம் நம்பமுடியாத பிரமாண்டம்

வேற்று கிரஹ வாசிகளின் விமானத்தளம் நம்பமுடியாத பிரமாண்டம்

நாஸ்கா லைன்ஸ் (Nazca Lines)
நாஸ்கா லைன்ஸ் என்பது பெரு நாட்டின் நாஸ்க்கா எனும் வரண்ட பகுதியில் நிலத்தின் மீது வரையபட்ட மிக நீண்ட (பல கி.மீ) கோடுகள் , சித்திரங்கள் ஆகும் .
இந்தச் சித்திரங்களின் முழுமை எவருக்குமே தெரியாது. இவற்றைப் பார்க்க வேண்டும் என்றால் வானத்தில் உயரப் பறந்தால் மட்டுமே முடியும். 1500 ஆண்டுகளுக்கு முன்பு இது சாத்தியம் இல்லை. இருந்தும் இந்தக் கோடுகள் எல்லாமே விமானத்தில் இருந்து எடுத்தாலும் தெளிவாகத் தெரியும் அளவிற்கு கீறப்பட்டிருக்கின்றன.
படங்கள் தவிரவும், விமான ஓடு பாதை போல பட்ட பட்டையான கோடுகளும் கிழக்கு மேற்க்காக, தென் வடலாகவும் வரையப்பட்டுள்ளன.நாஸ்க்கா படங்கள் 1920 ல் பெருவில் விமான போக்குவரத்து துவங்கும் பொழுதே வெளி உலகிற்கு தெரிய வந்தன. அதற்கு முன் இல்லையா என்றால் ஆய்வு இருந்திருக்கிறது ஆனால் தெளிவாக விளங்கிக் கொள்ளப்படவில்லை.1920-ல் இந்த வழியாக விமானத்தில் பறந்து சென்ற சுற்றுலா பயணிகளால் எதெச்சியாக கவனிக்கப்பட்டு கண்டறியப்பட்ட விசயமாகும். அதுவரை இவைகள் சிறிய சாலைகள் போலவும், வாய்க்கால்கள் போலவும் பார்க்கப்பட்டு வந்தது.

இவை கி.மு.600 முதல் கி.பி.200 க்குள் வரையப்பட்ட 2000 ஆண்டுகள் பழமையானது என வல்லுனர்கள் கூறுகிறனர். இதில் அதிசயம் என்னவென்றால் அன்றைய தொழில் நுட்பத்தில் இப்படிபட்ட சீரான நீண்ட, முறையான கோடுகளும் சித்திரங்களும் எவ்வாறு வரைய முடிந்தது என்பதுதான். அதனால் இந்த கோடுகளை பற்றி நிறைய கருத்துக்கள் நிலவுகின்றது.

இவையெல்லாம் எப்படி வரையப்பட்டன ?
எதற்கு வரையப்பட்டன ?
இத்துணை காலம் எப்படி அழியாமல் இருந்தன ?
எப்போது அறியப்பட்டது ?
இப்படி பல கேள்விகள் பார்க்கும் அணைவருக்கும் மனதில் தோன்றும்.

தரையில் ஒரு சிறிய படம் சுலபமாக வரைந்துவிடலாம் ஆனால் அதையே சங்கர் படத்தில் வருவது போல பிரம்மாண்டமாக வரைய வேண்டுமானால்…சரி வரைந்த படத்தை சரிபார்ப்பது ? இதன் முழு பரிமாணத்தையும் வானத்தில் இருந்தே பார்க்க முடியும். ஆனால் இவை எல்லாம் எப்படி சாத்தியம் ?…ஆச்சர்யமாக இருக்கிறது.இப்பகுதியின் நிலப்பரப்பு பழுப்பு சரளைக் கற்களால் நிரம்பியது…இக்கற்களை விலக்கினால் அதன் கீழ் பகுதியில் வெள்ளை நிற மணற்பகுதி.

கையில் ஒரு சிறிய ஸ்கெட்ஸ் வைத்துக்கொண்டு ஆங்காங்கே ஆப்பு வடிவ கற்களை நட்டு அவற்றிடையே கயிற்றைக்கட்டி வைத்து அல்லது கோடு போட்டுக்கொண்டு சரளைக்கற்கள் மண்களை சுவர் போல கரையாக கட்டி நடுவில் வண்டிப் பாதை போல உருவாக்கி இயற்கையான வெள்ளை திட்டு வரும் வரை சமன்படுத்தி இருக்கிறார்கள். இறுதியில் ஸ்கெட்சின் உருவம் பிரம்மாண்டமாக.சுருள் வட்ட வடிவங்களும் துள்ளியமாக சரிவிகித ஆரங்களில் உள்ளன.வானத்திலிருந்து பார்பதற்கு பழுப்பு கேன்வாசில் வரைந்த வெள்ளை ஓவியங்கள் போல இருக்கின்றன.

சித்திரங்கள்
இந்த வானம்பாடிப் பறவை (Humming bird) இரண்டு கால்பந்து மைதானங்களின் அளவுடையது. அதாவது 285 மீட்டர்.இங்கு கோடுகள் தவிர்த்து பலவிதமான வடிவங்களும், சித்திரங்களும் வரையப்பட்டிருக்கின்றன. இவை அனைத்தும் தொடங்கிய புள்ளியிலேயே முடியும்.
இந்தச் சித்திரங்களை மூன்று விதமான வகைகளில் நாம் பிரிக்கலாம்.

•நேர் கோடுகள்
•கணித (Geometry) முறையிலான வடிவங்கள்
•விலங்குகள், பறவைகள் போன்ற உருவங்கள்.

இந்த நாசுகா உருவங்களில் குரங்கு, நாய், சிலந்தி, பல்லி, திமிங்கலம், மீன், வானம்பாடி பறவை என்று தெரிந்த பல உருவங்கள் இருந்தாலும், தெரியாத உருவங்களும் பல இருக்கின்றன. இவற்றில் ஐம்பதுக்கும் மேலாக உள்ள உருவங்கள் மிகப் பிரமாண்டமானவை. மிகப் பெரிய உருவங்கள் கால் கிலோ மீட்டர் நீளத்துக்கும் நேர்கோடுகள் பல கிலோ மீட்டர் நீளத்துக்கும் வரையப்பட்டுள்ளன.
இங்குள்ள நிலத்தில் கருப்பு நிற கற்கள் பரந்திருக்கும். அவைகளை எடுத்துவிடால் வெள்ளை நிற மண் காணப்படும். இவ்வாறு இந்த கோடுகள் வரையப்பட்டது. பட்டைகளின் முடிவில் சிதையாமல் இருக்க மர துண்டுகளை வைத்துள்ளனர். அந்த மரத்துண்டுகள் மூலம் 2000 ஆண்டுகள் பழமையானது என கண்டறியப்பட்டுள்ளது. சில கோடுகள் 6இன்ச் ஆழம் கொண்டது.

இந்த பகுதி மிக வரண்ட பகுதியாகும். இங்கு 25டிகிரி வெப்ப நிலை நிலவுகிறது. அதனால்தான் இந்த பட்டைகள் இன்றும் சிதையாமல் உள்ளது. 1998-ல் வந்த ஒரு வெள்ளத்தில் இந்த பகுதியின் தார் சாலைகள் பாதிக்கப்பட்டதாம் இருந்தும் ஆச்சர்யமாக இந்த கோடுகள் சிதையவில்லை.
இதில் விமான ஓடுதளம் போன்ற ஒரு பட்டை 2கி.மீ நீளம் கொண்டது. இந்த பட்டை மிக சீராக நேரே செல்கிறது. இவ்வளவு தூரத்திற்கு இதை எப்படிதான் நிலத்தில் வரைந்தார்கள் என்று அதிசயக்க வைக்கிறது.
இதை விட ஆச்சர்யதக்க வகையில் மலைகளின் மீது பல கைகளை கொண்ட ஒரு உருவம் செதுக்கப்பட்டுள்ளது.இந்த கோடுகளும் சித்திரங்களும் எதற்காக வரையப்பட்டது என்பது பற்றி பல கருத்துக்கள் நிலவுகிறது.

இந்த கோடுகள் விவசாயத்திகாக நீர் பாய்ச்ச செய்யபட்ட சிறிய வாய்க்கால்கள் என பல அறிவியலார்களால் ஏற்றுகொள்ளப்பட்ட காரணமாகும். அங்குள்ள மக்கள், இந்த சித்திரங்கள் நீர் தேவதையை திருப்திபடுத்த வரையப்பட்டவை என நம்புகிறனர்.
வேற்று கிரக வாசிகளால் வரையப்பட்டு பயன்படுத்தபட்ட விமான ஓடுதளம் என்ற கருத்தும், இறைவன் பூமியை மேலிருந்து பார்த்து ரசிக்க வரையப்பட்டது என்ற கருத்தும் நிலவுகிறது.
ஆக வேற்று கிரக வாசிகளால் உருவாக்கப்பட்டதோ இல்லை சாதாரண மனிதர்களால் உருவாக்கப்பட்டதோ, இன்றளவும் இந்த நாஸ்கா கோடுகள் அறிவியலுக்கு அப்பாற்பட்ட புதிராக விளங்குகிறது.

Check Also

பீர் குடிக்கலாம் வாங்க…..

பீர் உலகின் பழமைவாய்ந்த மிக அதிகமாக உட்கொள்ளப்படும் மதுபானம் மேலும், நீர், தேனீருக்கு அடுத்தப்படியாக அதிகமாக உட்கொள்ளப்படும் குடிவகையாகும் தானியங்களிலிருந்து …