Home / செய்திகள் / தமிழ் தொலைக்காட்சியில் வரும் சரவணன் மீனாட்சி தொடரில் மைனாவின் கணவர் விஷம் குடித்து தற்கொலை………..

தமிழ் தொலைக்காட்சியில் வரும் சரவணன் மீனாட்சி தொடரில் மைனாவின் கணவர் விஷம் குடித்து தற்கொலை………..

விருகம்பாக்கத்தில் தனியார் லாட்ஜில் சின்னத்திரை நடிகையின் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து விருகம்பாக்கம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். வளசரவாக்கம், எஸ்.வி.எஸ் நகர் 1வது மெயின்ரோடு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சாந்தி இவரது மகள் ரம்யா, மகன் கார்த்திக் (30), ரம்யா திருமணமாகி வெளியூரில் தனது கணவருடன் வசித்து வருகிறார். கார்த்திக் தி.நகரில் உடற்பயிற்சி வைத்து நடத்தி வந்தார்.


இந்தநிலையில் பிரபல தமிழ் தொலைக்காட்சியில் வரும் சரவணன் மீனாட்சி தொடரில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்த நந்தினியும் இந்த உடற்பயிற்சி கூடத்திற்கு வந்துள்ளார். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட காதலில் இரு வீட்டாரின் சம்மதத்தோடு கடந்த 6.6.2016ம் ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நந்தினிக்கும், கார்த்திக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டது. நந்தினி வம்சம் படத்தில் கதாநாயகிக்கு தோழியாகவும், கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற படத்தில் காமெடி நடிகர் சூரிக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார்.  அதுமட்டுமின்றி தற்போது வேறு தொலைக்காட்சி தொடரிலும், நிகழ்ச்சி தொகுப்பாளினியாகவும் பணியாற்றி வருகிறார். தனியார் தெலைக்காட்சியில் நடந்த விளையாட்டு போட்டியில் நந்தினி, கார்த்திக் இருவரும் கலந்து கொண்டனர். இதில் கார்த்திக்கு காலில் காயம் ஏற்பட்டது.

திருமணம் முடிந்து சில மாதங்களில் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து நந்தினி கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவரை பிரிந்து அவரது தந்தை வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மனம் உடைந்து போன கார்த்திக் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளானதாகவும், உடற்பயிற்சி கூடத்தை சரிவர நடத்த முடியாமல் அந்த உடற்பயிற்சி கூடத்தை வேறு ஒருவருக்கு விற்று விட்டதாக கூறப்படுகிறது.

 மேலும் காலில் ஏற்பட்ட காயம் மற்றும் மன அழுதத்திற்காக நேற்று முன்தினம் கார்த்திக்கை அவரது தாய் கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை பெற்று விட்டு வீட்டிற்கு இருவரும் வந்துள்ளனர். அப்போது மாலையில் தனது நண்பரை பார்த்து விட்டு வருவதாக கூறி கார்த்திக் அவரது தாயிடம் கூறி விட்டு சென்று விட்டார்.

இரவு நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை, மேலும் செல்போனும் எடுக்காததால் சந்தேகம் அடைந்த அவரது தாய், கார்த்திக் தங்கியிருந்த லாட்ஜூக்கு சென்றார். அப்போது அவர் தங்கியிருந்த அறையின் கதவை தட்டி உள்ளனர். நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்து லாட்ஜ் ஊழியர்களை அழைத்துள்ளனர். அப்போதும் கதவு திறக்காததால் விருகம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கார்த்திக் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து பாத்ரூமில் தற்கொலை செய்து கொண்டபடி இறந்தநிலையில் இருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து போலீசார் கார்த்திக் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கார்த்திக் எழுதிய கடிதம் ஒன்றும் சிக்கி உள்ளது. அதில் தனது தற்கொலைக்கு  நந்தினியின் தந்தைதான் காரணம் என்றும், அக்கா, அம்மாவை நன்றாக பார்த்துக்கொள் என்று எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால் சின்னத்திரை நடிகையின் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து விருகம்பாக்ககம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Check Also

மதுரை மீனாட்சியை தரிசிப்பவர்களுக்கு லட்டு பிரசாதம்

மதுரை: தமிழக முதல்வர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சார்பில், பக்தர்களுக்கு இலவச லட்டு …