Home / செய்திகள் / அரசியல் செய்தி / ஸ்டாலின் வரலாற்றின் மறுபக்கம்

ஸ்டாலின் வரலாற்றின் மறுபக்கம்

வாழ்க்கைக் குறிப்பு:


ஏறத்தாழ அரை நூற்றாண்டாக இதுவரை தனது சாதனைகளைப் பற்றி மு.க.ஸ்டாலின் திருப்தி அடைந்தாலும், அதற்கு முடிவுதான் உண்டோ? நிச்சயமாக, வளர்ச்சிகள் மேலும் வளர்ச்சிகளுக்கு இட்டுச்செல்லும், சமூக மாற்றங்கள் மேலும் மாற்றங்களை கோரும், பல்வகைப் பண்பாடுகள், கலாசாரங்கள் கலந்து மேலும் பல புதிய பாரம்பரியங்களைப் படைத்து தொடர்ந்து உருவாகிவரும் தமிழகத்தில் அதற்கு முடிவே கிடையாது. ஆனால் எப்போதும் போலவே இந்த சவால்களைச் சந்திக்க மு.க.ஸ்டாலின் தயாராகவே உள்ளார். ஏனெனில் தமிழர்களின் வாழ்க்கை, மொழி, பண்பாடு ஆகியவற்றின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக் கூடிய தமிழகம் அவரது இதயத்துக்கு மிகவும் நெருக்கமானது.
** ஸ்டாலின் திறமையானவர்; கெட்டிக்காரர். அவருடைய தந்தையைப் போலவே அவரும் வெற்றி பெறுவார்.
பேரறிஞர் அண்ணா
மு.க.ஸ்டாலின் பிறப்பு
1953 மார்ச் 1 அன்று பிறந்த மு.க.ஸ்டாலின் முத்துவேல் கருணாநிதி-தயாளு அம்மாள் ஆகியோரின் மூன்றாவது மகனாவார்.
14 வயதில் பள்ளி மாணவராக இருந்தபோது மு.க.ஸ்டாலினின் அரசியல் வாழ்க்கை தொடங்கியது. 1967 தேர்தலில் அவர் தி.மு.க.வுக்கு பிரச்சாரம் செய்தார்.

1976 – அவசரநிலையை எதிர்த்ததற்காக மிசா சட்டத்தின் கீழ் கைது.
உள்நாட்டுப் பாதுகாப்பு சட்டத்தின் (மிசா) கீழ் 31 ஜனவரி 1976 அன்று அவர் கைது செய்யப்பட்டபோது மு.க.ஸ்டாலின் வயது 23. அப்போதைய அரசு அவரை அடித்து உதைத்து அடக்குவதற்கு செய்த அனைத்து முயற்சிகளையும் மீறி தனது கொள்கையில் உறுதியாக நின்றவராக மிசா சட்டத்தின் கீழ் அரசியல் கைதியாக அவரது பெயர் தேசிய நாளேடுகளில் தலைப்பு செய்தியாகியது.
அரசியல் வளர்ச்சி

1982 – தி.மு.க. இளைஞர் அணி தலைமையேற்பு
1984ல் அவர் இளைஞர் அணி செயலாளராக நியமிக்கப்பட்டார்,

1989 – சட்டமன்ற உறுப்பினராக (ஆயிரம் விளக்கு).
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு 1989ல் மு.க.ஸ்டாலின் முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினரானார். அப்போது முதல் அதே தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நான்கு முறை 1989, 1996, 2001, 2006ஆம் ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1996 – சென்னை மேயராகத் தேர்வு
1996-ஆம் ஆண்டு மு.க.ஸ்டாலின் சென்னை மாநகராட்சியின் முதல் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர் என்ற பெருமை பெற்றார்.

2001 – சென்னை மேயராக மீண்டும் தேர்வு
2001ஆம் ஆண்டு மு.க.ஸ்டாலின் மீண்டும் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் தமிழ் நாட்டில் அப்போதைய ஆளுங்கட்சி சட்டத்தை முறைகேடாக பயன்படுத்தி அவரை வெளியேற்ற இடையறாத அரசியல் பிரச்சாரத்தை நடத்தியதன் காரணமாக சட்டத்தை மதித்து அவர் ராஜினாமா செய்தார்.

2003 – தி,மு,க, துணைப் பொதுச் செயலாளராக தேர்வு
சென்னையில் நடைபெற்ற தி.மு.க.வின் 12வது பொதுக் குழு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2006 – உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்
தமிழ் நாடு அரசில் 13 மே 2006 அன்று மு.க.ஸ்டாலின் உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பொறுப்பு அளிக்கப்பட்ட்து. 2006 முதல் 2011 வரை அவரது பதவி காலத்தில், அவர் மகளிர் சுய உதவிக் குழுக்கள், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம், மின்னணு நிர்வாக மையங்கள், குடிநீர் விநியோகத் திட்டங்கள், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் போன்றவற்றை நிறைவேற்றினார்.

2008 – தி.மு.க.பொருளாளராகத் தேர்வு
மு.க.ஸ்டாலின் மீது கட்சியும் தலைமையும் நம்பிக்கை வைத்து 2008ஆம் ஆண்டு தி,மு,க. பொருளாளராகத் தேர்வு செய்தது.

2009 – தமிழ் நாட்டின் துணை முதல்வராக நியமனம்
தமிழ் நாடு வரலாற்றில் முதலாவதாக மு.க.ஸ்டாலின் துணை முதல்வர் பதவியை வகித்தார். அவர் 29 மே 2009 முதல் 15 மே 2011 வரை இப்பதவியை வகித்தார்.

2011 – கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு
தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தலில் சென்னை மாவட்டம் கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்று 13 மே 2011 அன்று மு.க.ஸ்டாலின் மீண்டும் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2017 சனவரியில் திமுகவின் செயல் தலைவர் பதவி இவருக்கு வழங்கப்பட்டது.

Check Also

மதுரை மீனாட்சியை தரிசிப்பவர்களுக்கு லட்டு பிரசாதம்

மதுரை: தமிழக முதல்வர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சார்பில், பக்தர்களுக்கு இலவச லட்டு …