Home / செய்திகள் / இந்தியா / பிளாஸ்டிக் அரிசி, முட்டை, நூடுல்ஸ், சர்க்கரை செய்வது எப்படி????

பிளாஸ்டிக் அரிசி, முட்டை, நூடுல்ஸ், சர்க்கரை செய்வது எப்படி????

பிளாஸ்டிக் அரிசி:

”அரிசியைச் செயற்கையாகச் செய்ய முடியுமா…?”
”நிச்சயமாக முடியும். அரிசிக் குருணையோடு சில இயற்கைத் தாதுக்களையும், சத்துக்களையும் சேர்த்து அரிசியை உற்பத்திச் செய்யமுடியும். முன்பே அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் இதைச் செய்துள்ளன.

பிளாஸ்டிக் அரிசி என்பது பிளாஸ்டிக்கில் செய்யப்படுவதில்லை. உருளைக்கிழங்கு மற்றும் சர்க்கரைவள்ளிக் கிழங்குடன் செயற்கைப் பிசினைக் கலந்து, பிளாஸ்டிக் அரிசி செய்யப்படுவதாகச் சொல்லப்படுகிறது . இந்த ரெஸின் பிளாஸ்டிக் பொருள்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுவதால், ‘பிளாஸ்டிக் அரிசி’ என்ற பெயர் அப்போது பிரபலமானது.

போலிகளுக்கு பெயர்போன நாடு சீனா:

சீனாவின் ஷாங்ஷி பகுதியில் பிளாஸ்டிக் அரிசி தயாரிக்கப்படுவதாகக் கொரிய மற்றும் மலேசியச் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பகுதிகளுக்குள் அயல் நாட்டினர் அனுமதிக்கப்படுவதில்லை
சீனா தயாரிப்பு அரிசியை எக்காரணம் கொண்டும் வாங்க வேண்டாம்.
எப்படிக் கண்டுபிடிப்பது?
பிளாஸ்டிக் அரிசி தனியாக விற்பனை செய்யப்படுவதில்லை. இவை அரிசியுடன் கலக்கப்பட்டே விற்பனைக்கு வருகின்றன.
சமைத்த பிறகு பிளாஸ்டிக் அரிசி முழுவதும் வேகாமல் முரட்டுத்தன்மையுடன் இருக்கும்.
பொதுவாக அரிசியை வேகவைத்தால் அதிலிருக்கும் ஸ்டார்ச், மேலே படலமாகப் படியும். பிளாஸ்டிக் அரிசி வேகும்போது கண்ணாடி போன்ற படலம் வரும். இதை வெயிலில் காயவைத்தால் மெல்லிய பிளாஸ்டிக் ஷீட் போல மாறிவிடும்.
பிளாஸ்டிக் அரிசியை நெருப்பில் காட்டினால் சர்க்கரைவள்ளிக் கிழங்கின் மணம் வெளிப்படும். பிளாஸ்டிக் அரிசியால் உண்டான சாதத்தை நசுக்கினால் அது கைகளில் ஒட்டாது.மேலும் பல நாட்கள் அது கெட்டுபோகாமலும் இருக்கும்.

உயிருக்கு ஆபத்தானது:

பிளாஸ்டிக் அரிசி எளிதில் ஜீரணமாகாது. தொடர்ந்து பிளாஸ்டிக் அரிசியைச் சாப்பிட்டு வந்தால், குடலியக்கச் செயல்பாடு சார்ந்த பிரச்சினைகளில் தொடங்கி மரணம்வரை இது இட்டுச்செல்லும் ஆபத்து இருக்கிறது.

இந்தியாவிலும் ஊடுருவல்:

இந்தியாவில் பிளாஸ்டிக் அரிசி கலப்படம் நடந்திருப்பதை இதுவரை அரசு உறுதிசெய்யவில்லை.

நூடுல்ஸ்:

அரிசி நூடுல்ஸ் பூஞ்சணம் (அ) பூசணம் பிடித்த, கெட்டுப் போன தானியங்கள் மற்றும், அரிசியைக் கொண்டு இந்த அரிசி நூடுல்ஸ் தயாரிக்கப் படுகிறது. ஏறத்தாழ 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இதைத் தயாரிக்கின்றன. இவை பெரும்பாலும் வெளிநாடுகளுக்கு தான் விற்கபடுகிறது.

கர்நாடகவை மிரட்டும் பிளாஸ்டிக் சர்க்கரை:

பாலிஸ் பிளாஸ்டிக் வாசனை ஹசன் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஓருவர் அங்குள்ள ஒரு மளிகை கடையில் ஒரு கிலோ சர்க்கரை வாங்கியுள்ளார். வீட்டுக்கு வந்து கொதிக்கும் பாலில் சர்க்கரையை போட்டுள்ளார். அப்போது பிளாஸ்டிக் உருகி வாசனை வந்துள்ளது. இதையடுத்து அதிர்ச்சி அடைந்தஅந்த பெண் சர்க்கரையை கீழே கொட்டி பார்த்தபோது வெள்ளை மணிபோன்ற பிளாஸ்டிக் சர்க்கரை கலக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக தகவல் போலீஸார் சம்பந்தப்பட்ட கடையில் சோதனை நடத்தி, பிளாஸ்டிக் சர்க்கரை மாதிரிகளை சேகரித்து சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிளாஸ்டிக் முட்டை தயாரிப்பு முறை:

முட்டையின் ஓடானது சுண்ணாம்பு கொண்டு தயாரிக்கப்படுகிறது அதன் உள்ளே இருக்கும் வெள்ளை கருவானது கால்சியம் குளோரைடு, சோடியம் அல்ஜினைட் இவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. மேலும் பல வேதிப் பொருட்களுடன் மஞ்சள் கலர் கலந்து முட்டையின் மஞ்சள் கரு தயாரிக்கப்படுகிறது இந்த முட்டையை நாம் உண்ணும் போது இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது.

முட்டையை எப்படி கண்டுப்பிடிப்பது என்பதை பார்ப்போம்:

முட்டையின் உட்புறம் உள்ள மெல்லிய ஜவ்வு போன்ற பகுதியை தனியே பிரித்து வைத்தால், அந்த முட்டை பிளாஸ்டிக்காக இருந்தால் சிறிது நேரத்தில் அந்த ஜவ்வு பகுதி கடினத் தன்மை அடைந்துவிடும். முட்டையை உடைத்து உள்ளே உள்ள மஞ்சள் மற்றும் வெள்ளைக் கருவை ஊற்றினால், நல்ல முட்டையாக இருப்பின் கரு தனித்தனியே தெளிவாக இருக்கும்.
அசல்(Original)முட்டையை நம் காதருகில் வைத்து குலுக்கினால் அதில் எந்தவித சத்தமும் கேக்காது ஆனால் பிளாஸ்ட்டிக் முட்டையை குலுக்கினால் உள்ளே இருக்கும் திரவம் ஆடும் சத்தத்தை கேட்க முடியும்..
குலுக்கிய முட்டையை உடைத்து பார்த்தால் மஞ்சள் கருவும் வெள்ளை கருவும் ஒன்றோடு ஒன்று கலந்து இருப்பதை காணலாம். ஆனால் நல்ல முட்டை அப்படி கலக்காது.
அசல் முட்டையின் ஓட்டில் மிக மிக நுண்ணிய துளைகள் காணப்படும். ஆனால் பிளாஸ்ட்டிக் முட்டையில் அப்படி எந்த துளைகளும் இருக்காது.. இது சாதாரண முட்டையை விட ருசியாக இருப்பதாய் மக்கள் கூறுகிறார்கள்.

தீமைகள்:

வயிற்றுப்போக்கு, குடல் புண், ஜீரணக் கோளாறு, பித்தப் பை பாதிப்பு போன்றவை உருவாக்குகிறது.
இந்தியாவிலும் ஊடுருவல்

இந்தியாவில் பிளாஸ்டிக் முட்டை கலப்படம் நடந்திருப்பதை இதுவரை அரசு உறுதிசெய்யவில்லை.

Check Also

அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு

டெல்லி: அயோத்தி நில வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளதை ஒட்டி நாடுமுழுவதும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. …